Posts

Showing posts from 2011

உலகத்தில் உள்ள விலங்கினங்களில் சுவை உணரும் சக்தி அதிகமாய் உள்ள மீன்

Image
கெளுத்தி மீன் அல்லது பூனை மீன் (cat fish) கதிர் துடுப்புடைய மீனினத்தைச் சேர்ந்தவை. இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. இவற்றின் தொடுமுளைகள் பூனையை நினைவுபடுத்துவது போல உள்ளதால் இவை மேனாட்டில் பூனை மீன்கள் என்று அறியப்படுகின்றன. இவற்றின் வடிவம் மற்றும் அளவு பலவாறாய் வேறுபட்டது. பெரும்பாலான கெளுத்தி மீன்கள் அடியில் வாழ்பவை. அவற்றின் கனமான தலை எலும்பும் இதற்கொரு காரணமாகும். இவற்றின் தட்டையான தலை பரப்பைத் தோண்ட உதவுகிறது. பெரும்பாலான நாடுகளில் இவை உணவாக உண்ணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 1987 ஆம் ஆண்டு முதல் சூன் 25 ஆம் நாள் கெளுத்தி மீன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. செதில்கள் இல்லாத காரணத்தால் யூதர்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் இவற்றை உண்பதில்லை மித தட்பவெப்ப வெப்ப வலயங்களில் உள்ள நாடுகளின் ஆறுகளில் கெளிறு மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்த மீன்கள் ஆழமான நீர்நிலைகளில் அடித்தளத்தில் கழிக்கின்றன. இவை குப்புறப் படுத்துக் கிடப்பதால் இவற்றின் உடல் மேலிருந்து கீழ் ஓரளவு தட்டையாக இருக்கும். கெளுத்தி மீனின் உடல் மேற்புறம் கருத்தும் அடிப்புறம் வெளுத்தும் இருக்கும்.

'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி

Image
வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்? வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால்இ வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ ந டக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும்இ அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்கு வது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது. 'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான் குட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி. மேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நி

துப்பாகியால் சுட்டால்???

Image
கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும் கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன் ? இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் -- அது துப்பாக்கிக் குண்டோ சாதாரணக் கருங்கல்லோ எதுவாயினும் அவற்றில் -- ஓரளவு விசை இயக்க ஆற்றல் (kinetic energy) உள்ளது; இந்த ஆற்றலை உந்தம்(momentum) என்பர். இவ்வுந்தம் பொருள் செல்லும் நேர்விரைவைப் (velocity) பொறுத்தது. அதாவது நேர்விரைவு மிகுதியாக இருந்தால் உந்தமும் மிகுதியாக இருக்கும். துப்பாக்கிக் குண்டு போன்ற எடை குறைந்த தக்கையான பொருளும் மிக விரைவாகச் செல்லும் போது அதனுடைய உந்தம்இ மெதுவாகச் செல்லும் எடை மிகுந்த பொருளின் உந்தத்தைவிடக் கூடுதலாக இருக்கும். துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறு மைல் விரைவில் செல்வதால்இ அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு விரைவில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும். அவ்வாறு பாய்ந்து செல்லும் குண்டு கண்ணாடிக் கதவால் தடுக்கப்படும்போதுஇ அதன் சிறு அளவு உந்தம் கண்ணாடிக்கு மாற்றப்பெறுவது உண்மையே; அதே நேரத்தில் துப்பாக்கிக் குண்டு சுழன்றவண்ணம் விரைந்து செல்வதால் கண்ணாடிக் கதவில் துளையை உருவாக

திகிலூட்டும் அதிர்ச்சி வளைவுகள்

Image
வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமையை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். அந்த அளவுக்கு உயரமாகவும் மோசமான ஏற்ற இறக்கங்களையும் வளைவுகளையும் கொண்டது இந்தப் தெருவுடன் இணைந்த பாலம். Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த வியத்தகு பாலம் பல்வேறு கார் கம்பனிகளினதும் விளம்பரங்களில் இடம்பிடித்து உள்ளது. ஐந்து மைல் நீளமான குறித்த தெரு 2005 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

உலகில் அதிசய நீர்ப் பாலம்

Image
கட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்ககூடிய வகையில் கட்டங்கள் அமைந்திருந்திரும். அந்த வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம். ஜெர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா? ஜெர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும். இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது. இது கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும். பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும். 1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன் வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ் நீர் பாலத்தில் இரு கப்பல் நாளாந்த சேவையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது . நன்றி இணையம்

உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்

Image
1000 கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்ட நாணயங்களை விட இது பல மடங்கு பெரிதானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் பேர்த் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் தூய தங்கத்தில் இருந்து இந் நாணயம் செய்யப்பட்டது. இதன் பெறுமதி 35மிலியன் பவுண்கள் என மதிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியா மகாராணியின் அவுஸ்திரேலியா விஜயத்தின் ஞாபகார்த்த சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு முகப்பில் மகாராணியின் சிரசு உருவமும், மறுபக்கத்தில் அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகமான கங்காருவின் உருவம் அமையுமாறு பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயத்தை உருவாக்குவதற்கு 18 மாதங்கள் எடுத்தாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி அதிகமாக இருந்த போதிலும் சட்டப்படி இதனை கொள்வனவு செய்தவர் 65,000 பவுண்கள் விலை மதித்துள்ளார். இதனை சட்டப்படி தங்கக் குச்சிகளாக்க முடியாது. இதனை ஒரு சின்னமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . நன்றி இணையம்

சரித்திரம் மிக்க சுதந்திர தேவி சிலை

Image
அமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரத்துடன்(93மீற்றர்) கம்பீரமாக வானை நோக்கி உயர்ந்து நிற்கிறது. அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக 125 வருடங்களுக்கும் மேலாக காட்சி தரும் சுதந்திர தேவி சிலையைப் பார்த்திருப்பீர்களே? ஒரு கையில் விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி இன்னொரு கையில் புத்தகம் ஏந்தியபடி தலையில் கிரீடத்துடன் நிற்கும் அந்த பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சி வரும் அல்லவா? உலகுக்கு வெளிச்சமூட்டும் விடுதலை என்றும் சுதந்திர தேவி சிலை என்றும் அழைக்கப்படும் இச்சிலை ஒரு நட்புறவின் அடையாளம் என்பது தெரியுமா உங்களுக்கு? ஆம் பிரான்சு அமெரிக்காவுக்கு வழங்கிய பரிசு தான் சுதந்திர தேவி சிலை. பண்டைய ரோமின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் லிபர்டாஸ் என்ற கடவுளச்சியின் வடிவம் போல விடுதலையை முன்னெடுத்துச் சென்று விளக்கொளி பரப்பும் தேவதை என்ற சிந்தனையில் சுதந்திர தேவி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் தலையில் உள்ள கிரீடத்தில் இருக்கும் 7 நீட்சிகள் - 7 கடல்களை யும் 7 கண்டங்களையும் குறிக்கும். கையிலிருக்கும் புத்தகம் அறிவையும்அதிலிருக்கும் தேதி ஜூலை 4 1887 என்று அமெரிக்கா உருவ

நம்மை அறியாமலே அதிசயம்!

Image
அன்றாடம் நாம் சிந்தித்து முடிவு செய்யாமலே பல செயல்களைச் செய்கிறோம். உதாரணமாக, கொதிக்கும் நீரில் கை பட்டால் `படக்’கென்று கையை எடுத்து விடுகிறோம். இங்கு, கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்டபிறகுதான் கையை எடுக்கிறோமா? இல்லை. நீரின் வெப்பத்தில் விரல்கள் பட்டவுடனே நரம்புகள் அச்சேதியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன. அதெல்லாம் சரிதான். ஆனால், வெப்பத்தால் ஏற்பட்ட வேதனையைப் பற்றிய யோசனை நமக்கு ஏற்படுகிறதே என்று கேட்கலாம். அது உண்மைதான். வெப்பத்தால் விரல் நரம்புகளில் இருந்து கிளம்பிய செய்தி, தண்டுவடத்தில் இருந்து தொடர்ந்து பெருமூளைக்குச் செல்கிறது. எனவே, சுட்ட வேதனையைப் பெருமூளை பதிவு செய்கிறது. `சுட்ட இடத்தில் மருந்து போட வேண்டுமா?’ என்று பெருமூளை சிந்திக்கிறது. ஆனால், கையைக் கொதிநீரில் இருந்து எடுத்த செயல் பெருமூளையின் உணர்ச்சிக்குக் காத்திருக்கவில்லை. இவ்வாறு பெருமூளையின் முடிவு இல்லாமலே நிகழும்

கண்களை இமைக்கக் காரணம்

Image
நெஞ்சிலே வந்து பூத்த பூவே என்னை ஆளும் காதல் தீவே என் கண் விழியாய் நீ ஆனாய் உன் கண் இமையாய் நான் ஆவேன் மழை அல்லது பனியின்போது கார் பஸ்சில் சென்றால் கவனித்திருக்கலாம். அப்போது ஹவைப்பர்' அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவும். ஆனால் எந்த ஹவைப்பரும்' நம் கண் இமைகளுக்கு நகராகாது. நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன. மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது ஏன் முக்கியமானது? இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது? இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை. அதன் பணி தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. மழைநீர் வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும் இ மைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவு

வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது.

Image
வைரத்தின் தன்மை மற்றும் கதிர்வீச்சுகளால் அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆஸ்திரேலியவின் சிட்னி நகரில் உள்ள மெக்கரி பல்கலைக்கழகத்தில் வைர ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் மில்டர்ன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. வைரத்தின் மீது புறஊதா கதிர்கள் (ULTRAVIOLET LIGHT) தொடர்ந்து படுவதால் அதில் பள்ளங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. முத்துக்களை போல வைரங்களும் ஆவியாகும் தன்மை கொண்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக புறஊதா கதிர்கள் படும் போது வைரம் விரைவில் ஆவியாகிறது. வேறு சில உலோகங்களைப் போல வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது. புறஊதா கதிர்களை தொடர்ந்து செலுத்தியதில் ஒரு சில வினாடிகளிலேயே வைரக் கல்லில் நுண்ணிய பள்ளங்கள் ஏற்பட்டன. அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இக்கதிர்வீச்சில் இருந்த வைரக் கற்கள் அதிகம் கரைந்தன. சூரிய ஒளியில் புறஊதா கதிர்கள் இருந்தாலும், வைரக் கல்லை பாதிக்கும் அளவுக்கு அவற்றின் வீரியம் இருப்பதில்லை. இதனால் வெயிலில் அணிந்து செல்வதால் வைரம் பாதிக்கப்படுவதில்லை. நன்றி இணையம்

உலக வெப்பமயமாதலால் பூமியின் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Image
நாம் வாழும் பூமியின் பருமன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலக தொழிற்சாலைகளில் வெளியேறும் கரியமில வாயுக்களால் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்ப அதிகரிப்பால் பூமியின் வட துருவம் மற்றும் தென் துருவத்தில் ஆண்டுக்கு 38 ஆயிரத்து 200 கோடி டன் பனிக்கட்டி உருகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பனிக்கட்டி உருகலால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஐஸ் யுகத்திற்கு பின்னர் பூமி மிகுந்த அளவு எடை குறைந்து காணப்பட்டது. இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பூமியின் மையப்பகுதி உலக வெப்பம் அதிகரிப்பால் பெருத்து உள்ளது. அண்டார்டிகாவிலும், கிறீன்லாந்திலும் ஐஸ் உருகி ஓடுவது தொடர்கிறது. ஐஸ் கட்டி காலத்தின் போது பூமியின் எடை பருமன் ஆண்டுக்கு ஒரு மில்லி மீற்றருக்கும் குறைவான அளவில் இருந்து வந்தது. ஐஸ் கட்டியின் அடுக்குகள் கடுமையானதாக இருந்த போது பூமியின் மேல் பகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கிரேஸ் எனப்படும் புவி ஈர்ப்பு மீட்பு சோதனை செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் பூமியில் பனிக்கட்டி உருகுவது அதிகரித்து

பௌர்ணமி தினத்தில் தேள்களில் எவ்வாறு ஒளி வீசுகின்றது.

Image
இருண்ட சூழ்நிலையில் தேள்களிலிருந்து புற ஊதாக் கதிர்வீச்சுகள் ஒளிர்ந்தால் பார்ப்பவரை திகிலடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பூரண பௌர்ணமி தினங்களில் இயற்கைக்கு மாறான வகையில் நியோன் நீல நிற கதிர்கள் தேள்களின் உடற்பாகங்களிலீருந்து ஒளிர்கின்றன. தேள்களின் எலும்புப் பகுதிகளில் புரதப் பொருளின் மீது புற ஊதாக் கதிர்கள் தாக்கமுறுவதனால் இவ்வாறு மனிதக் கண்களுக்கு அவை ஒளி வீசுவதாக் தோன்றுகின்றது. தேள்கள் தொடர்பான ஆய்வாளர்கள் இந்த வினாவிற்கு விடைகாண நீண்ட காலத்தை செலவிட்டனர். ஏனைய தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக ஒரு சாராரும், பாலைவனங்களில் தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக மற்றொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இரையை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு ஒளிர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த ஒளிமாற்றச் செயற்பாடு நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனினும், தீவிர ஆய்வுகளின் போது மேற்குறிப்பட்ட எந்தவொரு காரணியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது தொடர்பில் கலிபோர்

யானை இனத்தைச் சேர்ந்த விசித்திர விலங்கினம்

Image
இந்து சமுத்திரம் பசிபிக் சமுத்திரம் செங்கடல் உட்பட கிழக்கு ஆபிரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரையான கரையோர நீர்பரப்பில் டியுகோங்ஸ் விலங்கினங்கள் வாழ்கின்றன. இவற்றின் தோற்றம் மற்றும் நடத்தைகள் ஒன்றோடொன்று ஒத்தவையாக காணப்பட்ட போதிலும் டியுகோங்கிஸின் வாற் பகுதி திமிங்கிலத்தைப் போன்றது. இவ்விரண்டும் யானை இனத்தைச் சார்ந்தவை. எனினும் இவ்வாறான மிகப்பெரிய மிருகங்கள் தோற்றத்திலும் நடத்தையிலும் ஒத்தவையாக இருப்பதில்லை. நீருக்கடியிலுள்ள புல்லினத்தை பகலும் இரவுமாக இவை மேய்கின்றன. தமது உடலிலுள் தூரிகைகளால் இவற்றை கிளறிவிடுகின்றன. இவை தமது மென்மையான மூக்கினாலும் கரடுமுரடான உதடுகளினாலும் மென்று சாப்பிடுகின்றன. இந்த முலையூட்டிகள் முன்னர் சுமார் ஆறு நிமிடங்கள் நீருக்கடியில் மூழ்கி இருக்க கூடியவை. சில நேரங்களில் இவை நின்றவாறு நீருக்கு மேல் தலையை வைத்துக்கொண்டு வால்களினால் மூச்செடுக்கின்றன. இந்த வகையான விலங்கினங்கள் தமது பொழுதுகளை அதிகளவில் தனிமையாக அல்லது ஜோடியுடன் கழிக்கின்றன. இருப்பினும் சில வேளைகளில் நூற்றுக்கணக்கான விலங்கினங்களுடன் மந்தையாகவும் காணப்படுகின்றன. ஒரு வருட கால பிரசவத்துக்கு பின்னர் பெண் டிய

கண்ணை கவரும் வினோதமான அசைவுயும் புகைப்படம்

Image
இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது…உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவை அசைவுகளுடன் கூடிய படங்கள். இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும். ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும். ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர். ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும். ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம். நன்றி இணையம்

உலகின் மிகப் பெரிய அற்புத மலர்

Image
பெஸல் நகர தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அரிய ரக டைடான் அரும் மலரைக் காண்பதற்கு பெருந்திரளான மக்கள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர். உலகில் பூக்கும் மிகப்பெரிய மலர் இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதை ஒரு இயற்கையின் அற்புதமாகவே மக்கள் பார்க்கின்றனர். கடும் சுகந்தம் கெண்ட இந்த மலர் மஞ்சள் நிற மின்குமிழ் ஒன்றின் வடிவில் சுமார் இரண்டு மீற்றர் உயரத்துக்கு நீண்டு வளருகின்றது இந்த மலர் பெரிய வெள்ளித் தினத்தன்று பூக்க ஆரம்பித்துள்ளது. இதன் விஞ்ஞானப் பெயர் Amorphophallus titanium என்பதாகும். இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் உள்ள மழை வீழ்ச்சிக் காடுகள் தான் இதன் தோற்ற இடம். அங்கு இவை சுமார் மூன்று மீற்றர் உயரத்துக்கு வளரும் பண்பு கொண்டவை. இவை அரிதாகப் பூக்கும் ஒரு மலரினம். இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை. ஒரு சில நாட்களில் வாடிப்போய்விடும் பெஸல் நகரில் இந்தப் பூ இந்தளவுக்கு வளர 17 ஆண்டுகள் எடுத்துள்ளன. உலகம் முழுவதும் இதனை ஒத்த 134 பிரதிகள் உள்ளன. அவற்றுள் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்காவில் உள்ளன.

உலகின் முதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலை

Image
அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசியரான டேனியல் நோசேரா தலைமையிலான குழு உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுப்ப்டிப்பானது அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இதன் உருவம் உண்மையான இலை போன்று இருக்காது. ஆனால் ஒரு இலையின் செயற்பாடுகளை இது துள்ளியமாக செய்யும். உண்மை இலையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த இலையினை உருவாக்கியுள்ளனர். மின்சாரம் தயாரிக்க செயற்கை இலைகளை தண்ணீரின் மீது மிதக்க விடப்பட்டு இயற்கையில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை உள்வாங்கி தண்ணீரின் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை இது பிரித்து அதன் வழியாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் தெரிகிறது. அவற்றை வீடுகளுக்கு அருகே இருக்கும் பேட்டரிகளில் சேமித்து வைத்துக் கொள்ளும். அந்த பற்றரிகளில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த முறையிலான மின்சார ஆற்றலை பெறுவதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு மிகவும் குறைவான முறையிலும் இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புறங்களிலும் கூட மின்சாரத்தை எளிதாகப் பெறக்கூடியதாக இருக்கும். ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் ஞசான் டேர்னர்

நிறத்தைக் கொடுக்கும் வண்டு, குளவி போன்ற பூச்சியினங்கள்

Image
சில உணவுப்பொருட்களைப் பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றும். அதற்குக் காரணம் அவற்றின் மணமும், நிறமும்தான். நிறத்தைக் கொடுக்கும் பொருளை இயற்கையாகவும், செயற்கையாகவும் தயாரிக்கலாம். அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள பாலைவனங்களிலும், ஆஸ்திரேலியாவிலும் நிறத்தைக் கொடுக் கும் வண்டு, குளவி போன்ற பூச்சியினங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அந்தப் பூச்சிகளைப் பிடித்து நசுக்கிக் காயவைத்துப் பொடியாக்குவார்கள். அந்தப் பொடியோடு குறிப்பிட்ட அளவு தண்ணீரைக் கலந்து சிவப்பு நிறச் சாயத்தைத் தயாரிப்பார்கள். அந்தச் சாயத்தைத்தான் கேக் மற்றும் சில இனிப்பு வகை களில் சேர்த்து அவற்றுக்கு நிறம் கொடுக்கிறார்கள். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பூச்சிகளில் இருந்து ஒரு கிலோ சாயம் எடுக்கலாம். ஐரோப்பிய நாடுகள் இந்தச் சாயங்களை இறக்குமதி செய்து தங்கள் நாட்டுக் கொடிகளுக்கும், ராணுவத்தின் ஆடைக்கும் நிறம் கொடுக்கின்ற ன

தெர்மாமீட்டரில் என்ன இருக்கிறது?????????

Image
வெப்பத்தை அளக்கும் கருவி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்ற பெயர் கொண்ட இதில் முதலில் காற்றே பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றிச் சுமாரான அளவுகளையே இது தெரிவித்தது. பின்னர் இதன் திறனை அதிகரிக்க காற்றுக்குப் பதில் ஆல்கஹால் பயன் படுத்தப்பட்டது. உடல் வெப்பத்தைக் கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர் சாங்டோரியஸ் என்பவர். அவரது தெர்மாமீட்டர், நீண்ட நெளிவுள்ள குழாயாக இருந்தது. அதன் மேல் முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ் அமைந்திருந்தது. மறுமுனை திறந்திருக்கும். நோயாளி அந்தக் குமிழை வாயில் வைத்துக்கொள்ள, அதன் மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும். குழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடைந்து தண்ணீரின் வழியாக வெளியேறுகிறது. காற்று வெளியாகாத நிலை வந்தவுடன் அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்துக் குளிர வைத்தால் அதில் உள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் தண்ணீர் ஏறுகிறதோ, அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு. தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளிவெப்பநிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும்

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?

Image
லீh ட்டுக்கு நாடு மனிதர்களின் கண்களின் நிறம் மாற்றமாகக் காணப்படும். மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும், பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன. அவை பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாசார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாகுகிறது. உதாரணமாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது. கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது. மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுக