Posts

Showing posts from December, 2012

சிவப்பு மழை,மீன் மழை,மஞ்சள் மழை ,முதலை மழை

Image
சிவப்பு மழை சிவப்பு மழை அல்லது குருதி மழை எனப்படுவது ஓர் அரிதான சிவப்பு அல்லது கபில நிறத்தில் பெய்யும் மழையாகும். இது பல வகைப்பட்ட இலக்கியங்களில் ஒரு துக்க சம்பவத்தின் அறிகுறியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ எடுத்தாளப்பட்டுள்ளது. எனினும் இது சாதாரண இயற்கை நிகழ்வாகும். இது மழையுடன் கலந்த தூசால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கடுமையான காற்றுடன் கலந்திருக்கும் தூசானது நீராவி முகில்களாக ஒடுங்கி மழையாகப் பொழியும் போது சிவப்பு மழையாகப் பொழிவதாகக் கருதப்படுகின்றது. மழையில் கலந்திருக்கும் ஒரு வகை சிவப்பு அல்காவால் செம்மழை பொழிவதாக இலங்கையில் பொழிந்த சிவப்பு மழைக்கான விளக்கங்கள் கூறுகின்றன. இதேவேளை அண்மையில் செவனகல மன்னம்பிட்டிய ஹிக்குராங்கொட மற்றும் பதியதலாவ பகுதிகளில் பெய்த சிவப்பு மழையில் இலங்கையில் இதுவரை இனங்காணப்படாத உயிரின வகையொன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 'சிவப்பு நிற' மழை பெய்து வருகிறது.  இலங்கையின் செவனகல பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்திருக்கிறது. இதேபோல் இந்திகொலபெலஸ்ல ஆகி