Posts

Showing posts from August, 2011

நம்மை அறியாமலே அதிசயம்!

Image
அன்றாடம் நாம் சிந்தித்து முடிவு செய்யாமலே பல செயல்களைச் செய்கிறோம். உதாரணமாக, கொதிக்கும் நீரில் கை பட்டால் `படக்’கென்று கையை எடுத்து விடுகிறோம். இங்கு, கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்டபிறகுதான் கையை எடுக்கிறோமா? இல்லை. நீரின் வெப்பத்தில் விரல்கள் பட்டவுடனே நரம்புகள் அச்சேதியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன. அதெல்லாம் சரிதான். ஆனால், வெப்பத்தால் ஏற்பட்ட வேதனையைப் பற்றிய யோசனை நமக்கு ஏற்படுகிறதே என்று கேட்கலாம். அது உண்மைதான். வெப்பத்தால் விரல் நரம்புகளில் இருந்து கிளம்பிய செய்தி, தண்டுவடத்தில் இருந்து தொடர்ந்து பெருமூளைக்குச் செல்கிறது. எனவே, சுட்ட வேதனையைப் பெருமூளை பதிவு செய்கிறது. `சுட்ட இடத்தில் மருந்து போட வேண்டுமா?’ என்று பெருமூளை சிந்திக்கிறது. ஆனால், கையைக் கொதிநீரில் இருந்து எடுத்த செயல் பெருமூளையின் உணர்ச்சிக்குக் காத்திருக்கவில்லை. இவ்வாறு பெருமூளையின் முடிவு இல்லாமலே நிகழும்

கண்களை இமைக்கக் காரணம்

Image
நெஞ்சிலே வந்து பூத்த பூவே என்னை ஆளும் காதல் தீவே என் கண் விழியாய் நீ ஆனாய் உன் கண் இமையாய் நான் ஆவேன் மழை அல்லது பனியின்போது கார் பஸ்சில் சென்றால் கவனித்திருக்கலாம். அப்போது ஹவைப்பர்' அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவும். ஆனால் எந்த ஹவைப்பரும்' நம் கண் இமைகளுக்கு நகராகாது. நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன. மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது ஏன் முக்கியமானது? இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது? இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை. அதன் பணி தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. மழைநீர் வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும் இ மைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவு