Posts

Showing posts from July, 2011

வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது.

Image
வைரத்தின் தன்மை மற்றும் கதிர்வீச்சுகளால் அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆஸ்திரேலியவின் சிட்னி நகரில் உள்ள மெக்கரி பல்கலைக்கழகத்தில் வைர ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் மில்டர்ன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. வைரத்தின் மீது புறஊதா கதிர்கள் (ULTRAVIOLET LIGHT) தொடர்ந்து படுவதால் அதில் பள்ளங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. முத்துக்களை போல வைரங்களும் ஆவியாகும் தன்மை கொண்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக புறஊதா கதிர்கள் படும் போது வைரம் விரைவில் ஆவியாகிறது. வேறு சில உலோகங்களைப் போல வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது. புறஊதா கதிர்களை தொடர்ந்து செலுத்தியதில் ஒரு சில வினாடிகளிலேயே வைரக் கல்லில் நுண்ணிய பள்ளங்கள் ஏற்பட்டன. அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இக்கதிர்வீச்சில் இருந்த வைரக் கற்கள் அதிகம் கரைந்தன. சூரிய ஒளியில் புறஊதா கதிர்கள் இருந்தாலும், வைரக் கல்லை பாதிக்கும் அளவுக்கு அவற்றின் வீரியம் இருப்பதில்லை. இதனால் வெயிலில் அணிந்து செல்வதால் வைரம் பாதிக்கப்படுவதில்லை. நன்றி இணையம்

உலக வெப்பமயமாதலால் பூமியின் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Image
நாம் வாழும் பூமியின் பருமன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலக தொழிற்சாலைகளில் வெளியேறும் கரியமில வாயுக்களால் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்ப அதிகரிப்பால் பூமியின் வட துருவம் மற்றும் தென் துருவத்தில் ஆண்டுக்கு 38 ஆயிரத்து 200 கோடி டன் பனிக்கட்டி உருகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பனிக்கட்டி உருகலால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஐஸ் யுகத்திற்கு பின்னர் பூமி மிகுந்த அளவு எடை குறைந்து காணப்பட்டது. இன்று நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது பூமியின் மையப்பகுதி உலக வெப்பம் அதிகரிப்பால் பெருத்து உள்ளது. அண்டார்டிகாவிலும், கிறீன்லாந்திலும் ஐஸ் உருகி ஓடுவது தொடர்கிறது. ஐஸ் கட்டி காலத்தின் போது பூமியின் எடை பருமன் ஆண்டுக்கு ஒரு மில்லி மீற்றருக்கும் குறைவான அளவில் இருந்து வந்தது. ஐஸ் கட்டியின் அடுக்குகள் கடுமையானதாக இருந்த போது பூமியின் மேல் பகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கிரேஸ் எனப்படும் புவி ஈர்ப்பு மீட்பு சோதனை செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் பூமியில் பனிக்கட்டி உருகுவது அதிகரித்து