Posts

Showing posts from March 5, 2012

பாம்பிற்கு பால் ஊற்றுவது ஏன்?

Image
பரோமோன்ஸ்கள் என்றால் என்ன? பரோமோன்ஸ்கள் உண்டாக்கும் விளைவு உள்ளுணர்வால் ஏற்படுவதாகும். இது உயிரினம் கற்றறிந்து உண்டாவதில்லை. மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களிலும்  பரோமோன்ஸ்கள் காணப்பட்டாலும் பூச்சியினங்களிலேயே இது மிகப்பரவலாய்க் காணப்படுகிறது.  பரோமோன்ஸ்களைப்  பற்றிய அறிவு வாசனைத் திரவியங்கள் தயாரித்தல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பாம்பிற்கு பால் ஊற்றுதல் முட்டை வைப்பதன் காரணம் என்ன ?  உண்மையும் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்இமனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெ