Posts

Showing posts from September 25, 2012

மிக அரிதாகவே ஏற்படும் தீ பிசாசு

Image
ஆஸ்திரேலியா, அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் (திங்கட்கிழமை 18/09/2012) தோன்றிய fire tornado இது. மிக அரிதாகவே ஏற்படும் இதை தீ பிசாசு (fire devil) என்றும் அழைப்பார்கள். நேற்று இதை நேரில் கண்டவர்கள், “போர் விமானம் ஒன்று எழுப்பும் ஒலி போல கேட்டது. திடீரென வானத்துக்கும் பூமிக்குமான நெருப்பு கீற்று உருவானது” என்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடத்துக்கு மேல் fire tornado நீடிக்கவில்லை. அதற்குள் கிளிக் செய்யப்பட்ட போட்டோ இது. மிகப் பெரிய  நெருப்பு  சுழல் காற்று வடிவை அடைதல்  எரி சுழல் காற்று  (Fire whirl அல்லது fire tornado) எனப்படும். இது பொதுவாக  காட்டுத்தீகளின்  போது உருவாகும். அதிக  வெப்பத்தின்  காரணமாக  காற்று  மேலெளும்பலாலேயே இவ்வாறு உருவாகிறது. 1923ல் ஜப்பான் மற்றும் 2012ல் ஹவாய் ஆகிய இடங்களில் எரிசுழல் காற்று உருவாகியுள்ளது.

ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்

Image
  ஐரோப்பிய நாடான பிரான்ஸூக்கு தனித்துவமான ஒன்றாக இருப்பதோடு, அதற்கு வருமானத்தையுயும் ஈட்டித் தருவதுதான் ஈபெல் கோபுரம். இத்தாலியிலுள்ள ஒரு நிறுவனத்தின் கணிப்பின்படி, ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம் இந்த ஈபிள் கோபுரந்தான் என்று அறிவித்திருக்கின்றார்கள். தமது மண்ணிலுள்ள கொலோசியத்திற்கு மூன்றாவது இடத்தையே கொடுத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த ஈபெல்  கோபுரத்தை ஆவலுடன் சென்று பார்ப்பவர்கள் தொகை எவ்வளவாக இருக்கலாம் என்று நினைக்கின்றீர்கள்? பாரிஸ் நகரம் நினைத்து நினைத்துக் கர்வம் கொள்ளும் வகையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஈபெல் கோபுரத்தை நேரில் காண, ஒரு வருடத்தில் 8 மில்லியன் உல்லாசப் பயணிகள் வந்து போகின்றார்கள் என்கின்றது ஒரு கணக்கு! அப்பப்பா ஜனக்கூட்டம் மொய்க்கின்றது என்றே சொல்ல வேண்டும்! பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் இந்தக் கோபுரத்தின் மதிப்பை 334 பில்லியன் என்று இத்தாலிய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்தக்  320 மீற்றர் உயரமான கோபுரத்தோடு போட்டியிடும் ரோமானியரின் காலத்தால் அழியாத அற்புதமான கொலோசியம் இதன் பெறுமதியில், ஐந்து