Posts

Showing posts from November 20, 2009

சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Image
இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும். மாம்பழம் சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. . மாம்பழம் உலகெங்கும்இ குறிப்பாக ஆசியாவில்இ கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும் பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. உடல் நல பலன்கள் மாம்பழச்சதையில் 15% சர்க்கரை 1% புரதம் பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ பி சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும் சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ கூழாகவோ உறுதியாகவோ இருக்கும்.மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும் கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும் இரத்த இழப்பு நிற்கும் இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன் படுத்தப்படுகிறது. மாதுளம் பழம் மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை ச