Posts

Showing posts from October 27, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-04

Image
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் Christiaan Huygens ஏப்ரல் 14 1629 – ஜூலை 8 1695) ஒரு டச்சு கணிதவியலாளர் வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். 1655 ஆம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார். பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் Christie Jeyaratnam Eliezer 1918 - மார்ச் 10 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும். எலியேசர் அவர்கள் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று பின்னர் லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (Phனு) பட்டம் பெற்றார். எட்வர்ட் டெல்லர் (Edward Teller) ) (ஜனவரி 15 1908 – செப்டம்பர் 9 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற