நன்னம்பிக்கை முனை cape of good hope

1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் "புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது. நன்னம்பிக்கை முனை ( Cape of Good Hope ) என்பது தென்னாபிரிக்காவின் தெற்குக் கரையோரமாகவுள்ள ஒரு கற்பாறைக் குடா ( headland ) ஆகும். 1488 இல் தூர கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதற்கு இம்முனையைச் சுற்றி வருவது போர்த்துக்கீச மாலுமிகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத மைல்கல்லாக் இருந்தது. தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பெரும் முனையாக இது கருதப்படுகிறது நன்னம்பிக்கை முனை (1888 வரைபடம்) நன்னம்பிக்கை முனையில் 1855 இல் வெளியிடப்பட்ட ஒரு முக்கோண அஞ்சற்தலை நன்னம்பிக்கை முனை ( Cape of Good Hope ) எ...