கொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு-01

ஆபிரகாம் லிங்க்கன் ஆபிரகாம் லிங்க்கன் (பிறப்பு பெப்ரவரி 12 1809—இறப்பு ஏப்ரல் 15 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார். 1865 இவர் வாஷிங்ட்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் நவம்பர் 19 1831 – செப்டம்பர் 19 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அதிபர் பதவியில் இருந்தார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இ...