சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம்

சூரிய நடுக்கத்தினால் சீற்றத்துடன் பாய்ந்து வீசும் பிழம்பு 2012 என்ற படம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது யாவரும் அறிந்தது.ஆனால் அதில் காட்டப்பட்ட விஞ்ஞான கருத்துக்கள் ஒவ்வொன்றும் தற்காலத்தில் உண்மையாகலாம் என்ற ஊகிக்கப்படுகிறது காரணம் விஞ்ஞானிகள் அறிவியலாளர்கள் எச்சரிக்கை ஆகும் அதில் ஒன்று சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது. வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் திட்டமிடல் அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள். ' நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது இன்னும் சில ஆண...