Posts

Showing posts from February 22, 2011

ஆள்நடமாட்டம் இல்லாத பாலைவனத்தில் தானாக நகரும் கற்கள்

Image
அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில் வரட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றனவாம். இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமியைச் சுற்றி வருகின்றன. சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது. இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற் துண்டுகள் உடைந்து வ