Posts

Showing posts from December, 2010

2010 ரசியுங்கள் 2011 சிந்தியுங்கள்

Image
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வணக்கம் நண்பர்களே புதிய ஆண்டில் புதிய சிந்தனையுடன் புதிய திசையை நோக்கி பயணிக்க புதிய ஆண்டு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதிய ஆண்டை வரவேற்போம். மனிதன் ஒரு நொடிக்குள் ஆக்குவதை விட அழிப்பதையே தற்போதைய உலக அரங்கில் சாதாரண காணமூடிகிறது. இனி பதிவுக்கு வருவோம்.ஒரு நொடியில் கமராவினால் பெறப்பட்ட அற்புத படங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள் இலங்கையர் அனைவரும் ஒற்றுமையுடன் ஏற்றத்தாழ்வின்றி வாழ்வதற்கு புதிய ஆண்டு வழிவகுக்கட்டும் .

மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?

Image
என் மனதை கொத்திவிட்டு கூடுகட்டி குடியும் ஏறிவிட்ட மரங்கொத்தி பறவை நீ... என் மனதை கொத்தி விடு போகாதே.. . அவுஸ்திரேலியா நியூசிலாந்து மடகாஸ்கர் மற்றும் தென் - வட முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மரங்களிலும் வாழும் பூச்சிகளே இவற்றின் முக்கிய உணவு. மரங்கொத்தி பறவைகள் வனம் மற்றும் தோட்டங்களில் உள்ள மரங்களில் கூடு அமைத்து வசித்து வருகின்றன. மரங்கொத்திக்கு சிறந்த செவிப்புலன் உண்டு . அது மரத்தில் தொத்திகொண்டவுடன் காதைவைத்துக் கேட்கும் . உள்ளே பூச்சிகள் நடமாட்டம் காதில் விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தை துளைத்து நீண்ட நாக்கால் பூச்சிகள் லபக்!. மரப் பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக மரங்களை கொத்துகின்றன; தவிர மரங்களில் ஓட்டை அமைத்து அதில் தங்களுக்கான குடியிருப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. மரங்கொத்த

நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?

Image
ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் . பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை ..அவற்றில் ஒன்று தான் இது . ஏன் வானம் நீலம் ? சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது .இதனை வானவில்லில் அவதானிக்கலா வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது . ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை . சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன . குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது . உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன . அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது . ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?

Image
புகைப்படத்தில் தெரியும் கண்கள் கூட கவிதை பேசும் இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர். கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில்

உலகில் மிக மெதுவாக நடக்கும் பாலூட்டி விலங்கு

Image
உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன. இதன் மேலோடு கடுமையான பலம் பொருந்தியதாகவும் இதன் உட்பகுதி மிகவும் பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது. விலா எலும்புகளும் முதுகு எலும்புகளும் ஒன்றாகி உடல் தசைகள் சுருங்கி காணப்படுகின்றன. இவற்றின் நுரையீரல் மேலோட்டினை ஒட்டியவாறு அமைந்திருக்கிறது. பற்களுக்குப் பதிலாக கொம்புகளால் ஆன அசையாத அலகு போன்ற அமைப்பு இரு தாடைகளிலும் இருக்கிறது. இதன் கை, கால்கள் நீர் மற்றும் நிலத்தில் வாழ ஏற்றதாகவும் உள்ளது. முன்கால்கள் துடுப்புகளைப் போன்று இருப்பதால் மிகவேகமாக கடலில் நீந்திச் செல்கின்றது. இது தரையில் 0.17 miles/ hours (273 meters/hours)நடந்து செல்லக் கூடியது பின்னங்கால்களில் உள்ள விரல்கள் சவ்வு போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. கண்கள் சிறியதாக இருப்பினும் அனைத்து வண்ணங்களையும் காணமுடியும். கடல் ஆமைகளின் வாயிலும் கழிவுகளை வெளியேற்றும் பகுதியிலும் சிறப்பு ரத்த நாளங்கள் உள்ளன. இவை நீரில் மூழ்கி இருக்கும் போது பிராணவாயுவை நீரிலிருந்து பிரித்தெடுத்து சுவாசிக்க உதவுகிறது.

சீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல்

Image
சீனி சிறிய கட்டிகளால் ஆன திண்மப் பொருள்ளாகும். சீனியானது கரும்பு மற்றும் பீட்றூட் இல் இருந்து தயாரிக்கப் படுகின்றது. இது இந்தியா பாக்கிஸ்தான் சீனா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கரும்பில் இருந்தே பெறப்படுகின்றது கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி சிலருக்கு திடீரென கோபம் கொந்தளித்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தயங்குவார்கள் அல்லது சிலருக்கு அள்வுக்கு அதிகமான மன அழுத்தம் இருக்கலாம் அவர்கள் ஒரு கரண்டி சீனியை வாயில் போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது. இதே போல மன அழுத்தம் இருந்தாலும் சிறிய சீனி யை அல்லது ஏதேனும் ஒரு சாக்லேட் சாப்பிட்டால் சரியாகி விடும் என்றும் கூறி இருக்கின்றனர். அதிலும் எலுமிச்சை சாற்றில் சீனி கலந்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. காபியுடன் சேர்க்கும் சீனி ஞாபக சக்தியை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை பொதுவாக காபியுடன் சீனி சேர்க்க கூடாது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் என கூறுவது உண்டுஇ ஆனால் காபியுடன் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதன்மூலம் ஞாபகசக்தி அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சி