Posts

Showing posts from May 8, 2010

கொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன்

Image
கிரிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) (1451-1506) ஒரு கடல் பயணி வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (ஸ்பெயின் நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது . கொலம்பஸின் வரலாற்று முக்கியத்துவம் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்கா பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும். உண்மையாக கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர் ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார்.முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள் வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட ஐரோப்பாவிற்குச் சென்றுள்ளனர். இருந் தாலும் கொலம்பஸின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும். முதல் பயணம்