உலகில் தாவர உணவுகளை மட்டுமே உண்ணும் பகீரா கிப்லிங்கி சிலந்தி

தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி வகை ஒன்று பற்றிய தகவல்களை அறிவியலாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர். பகீரா கிப்லிங்கி (Bagheera kiplingi )எனப்படும் இவ்வகை சிலந்திகள் நடு அமெரிக்காவிலும் மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வருகின்றன. இவையே சிலந்தி வகைகளில் தாவர உணவை மட்டும் உண்பவை. இவற்றைவிட ஏனைய இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும். இது குறித்த ஆய்வுக் கட்டுரை 'நடப்பு உயிரியல்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஐ க்கிய அமெரிக்காவில் பென்சில் வேனியாவின் விலனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கறி என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பாயும் சிலந்திதேள் வகுப்பு வகுப்பைச் சேர்ந்த இவை 5-6மிமீ நீளமானவை. புரதங்கள் நிறைந்த அக்காசியா வகைத் தாவரங்களின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலக்கியே வர வேண்டியிருக்கிற து. இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக கொஸ்டா ரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவர...