Posts

Showing posts from October 25, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03

Image
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனதுமுந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். வி ல்லியம் சொக்லி ( William Bradford Shockley பெப்ரவரி 13 1910 - ஆகஸ்ட் 12 1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன் வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரைட் சகோதரர்கள் ( Wright brothers ஓர்வில் (ஆகஸ்ட் 19 1871 – ஜனவரி 30 1948) வில்பர் (ஏப்ரல் 16 1867 – மே 30 1912) என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்ஃமணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார் . அடா யோனத் ( Ada Yonath எபிரேயம்: பிறப்பு: 22 சூன் 1939) இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலா