Posts

Showing posts from July 16, 2010

உலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள்

Image
லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் Beluga லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் வெண்திமிங்கலம் வடதுருவப்பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகைபாலூட்டி. இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் (16அடி) நீளம் வரை வளரக்கூடியது. அனைத்து வகையான கடல் பன்றிகளை (டால்பின்) விடப் பெரியதாகவும் (மிகப்பெரிய டால்பின்வகைகளை அல்ல) அனைத்து வகையான பற்கொள் கொண்ட திமிங்கிலங்களை விட சிறியதாக தோற்றம் கொண்டது. பெண்பால் வகையை விட ஆண் வகைகள் பெரியதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1360 கிலோ வரையும் பெண் 900 கிலோ வரை எடை கொண்டது. பிறந்த உடன் 1.5 மீட்டர்(5 அடி) நீளமும் 80 கிலோ எடையும் இருக்கும். பொதுவாக பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் இருக்கும் . Sarus Crane சாரசு கொக்கு சாரசு கொக்கு என்பது இந்தியாவில்நடுப்பகுதியிலும் கங்கையாற்றுப்படுகையிலும் வட பாக்கித்தான் நேபாளம் தென்கிழக்கு ஆசியா ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும் ஒரு வகைப் பெரியகொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும் நன்கு வளர்ந்த சாரசு கொக்குகள் சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கருத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்ப