இயற்கையின் ஒரு தொழிற்பாடு வெந்நீரூற்று

வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது நீராவியுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படுவதாகும். புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால் இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில் பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றியிருக்கும். நிலநீரானது நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும் நீரானது நிலத் துளைகளூடாக சூடான ஆவியுடன் கூடிய நீரை வேகத்துடன் வெளியேற்றும் செயற்பாட்டினால் இந்த வெந்நீரூற்றுகள் உருவாகின்றன The geyser Strokkur in Iceland; as a tourist spot. வெந்நீரூற்றின் உருவாக்கத்திற்கும் தொழிற்பாட்டுக்கும் வாழ்வுக் காலம் சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே. பொதுவாக இவை எரிமலை செயற்பாட்டுடன் தொடர்புடையதாகவே இருக்கும். நிலத்தின் கீழாக நீரானது கொதிக்கும்போது உருவாகும் அமுக்கமானது உயர் வெப்பநிலையைக் கொண்ட நீரையும் நீராவியையும் நிலத்தின் உள்ளிருந...