சரித்திரம் மிக்க சுதந்திர தேவி சிலை

அமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரத்துடன்(93மீற்றர்) கம்பீரமாக வானை நோக்கி உயர்ந்து நிற்கிறது. அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக 125 வருடங்களுக்கும் மேலாக காட்சி தரும் சுதந்திர தேவி சிலையைப் பார்த்திருப்பீர்களே? ஒரு கையில் விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி இன்னொரு கையில் புத்தகம் ஏந்தியபடி தலையில் கிரீடத்துடன் நிற்கும் அந்த பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சி வரும் அல்லவா? உலகுக்கு வெளிச்சமூட்டும் விடுதலை என்றும் சுதந்திர தேவி சிலை என்றும் அழைக்கப்படும் இச்சிலை ஒரு நட்புறவின் அடையாளம் என்பது தெரியுமா உங்களுக்கு? ஆம் பிரான்சு அமெரிக்காவுக்கு வழங்கிய பரிசு தான் சுதந்திர தேவி சிலை. பண்டைய ரோமின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் லிபர்டாஸ் என்ற கடவுளச்சியின் வடிவம் போல விடுதலையை முன்னெடுத்துச் சென்று விளக்கொளி பரப்பும் தேவதை என்ற சிந்தனையில் சுதந்திர தேவி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் தலையில் உள்ள கிரீடத்தில் இருக்கும் 7 நீட்சிகள் - 7 கடல்களை யும் 7 கண்டங்களையும் குறிக்கும். கையிலிருக்கும் புத்தகம் அறிவையும்அதிலிருக்கும் தேதி ஜூலை 4 1887 என்று அமெரிக்கா உருவ...