ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 7 மொரிஷியஸ் தீவு பற்றி தமிழர்கள் அறிந்திருக்கும் அளவிற்குஇ அதைவிட பன்மடங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த “கொமொரோ” (ஊழஅழசழள) தீவுகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிழக்கு ஆப்பிரிக்க கடலில்இ ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மாபெரும் மடகஸ்கார் தீவை பிரிக்கும்இ மொசாம்பிக் நீரிணையின் மத்தியில் அமைந்துள்ள நான்கு சிறு தீவுகள் சேர்ந்துஇ கொமொரோஸ் குடியரசு உருவானது. உலக வரைபடத்தில் பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்க வேண்டிய குட்டி தேசம். பிரான்சின் நவ-காலனியக் கொள்கையின் கேலிச்சித்திரம். வெள்ளையின கூலிப்படைகளின் (இன்று: “தனியார் இராணுவம்”) விளையாட்டு மைதானம். கற்பனைக்கெட்டாத திகில் கதைகள் பலவற்றைக் கொண்டது அந்த தேசத்தின் வரலாறு. கொமோரோ தீவுகளை “இருண்ட ஆப்பிரிக்காவை” சேர்ந்த பகுதியாக கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நீண்ட காலமாகவே இந்து சமுத்திர வர்த்தகத்தில் ஈடுபட்ட அரேபிய வியாபாரிகள்இ கொமோரோ தீவுகளில் தங்கிச் செல்வது வழக்கம். அவர்கள் ஏற்கனவே அங்கே வசித்து வந்தஇ உள்ளூர் கறுப்பினஇ மலேய(அல்லது இந்தோனேசிய) மக்களுடன் கலந்திருக்க வாய்ப்புண்டு. அரேபிய...
Posts
Showing posts from April 15, 2009