உலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி

உலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட Einstein ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி அமெரிக்காவில் 23/04/2010 பிறந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பார்ன்ஸ்டெட் என்ற இடத்தில் உள்ள குதிரைப் பண்ணையில் இந்த குதிரைக்குட்டி பிறந்துள்ளது. பிறந்த போது உயரம் 35 சென்டி மீட்டர் மட்டுமே. பிறந்த போது இதனுடைய நிறை (2.7Kg) ஆகும் உலகின் மிக குள்ளமான குதிரை இதுவாகும் குதிரை பற்றிய ஒரு கண்ணோட்டம் குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கு. குதிரை பாலூட்டிகளில் வரிக்குதிரை கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இது நீண்ட காலத்திற்கு முன்பே மனிதனால் பழக்கப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை மனிதனின் போக்குவரத்துக்கும் மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்தது. சில பகுதி மக்களின் உணவாகவும் இது இருந்துள்ளது. பண்டைய நாடுகளின் படைகளில் குதிரைப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. குதிரைகள் நின்று கொண்டே தூங்க வல்லவை