Posts

Showing posts from 2014

தாவர உலகின் பிசாசு

Image
இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்றுதானே கேட்கிறீர்கள்? உயரம் என்று எடுத்துக் கொண்டால் 16 முதல் 98 அடி வரை தான் இருக்கும். செக்வோவியா - ஆஸ்திரேலிய நாட்டு யூக்கலிப்டஸ் மரங்கள் 400 அடிவரை உயரமானவை. மரத்தின் குறுக்களவைக் (விட்டம்) கணக்கிட்டால் 23முதல் 36 அடிவரை உள்ளது. பாவோபாப்தான் வேறு எந்த மரமும் கிடையாது. அதற்கிணையாக மரத்தின் சுற்றளவு 154 அடி வரை உள்ளது. இந்தப் பார்வையில் பார்க்கும்போது பாவோபாப் மரங்கள்தான் உலகின் மிகப் பெரிய மரங்கள். பேரதிசயம் என்னவென்றால் அடிமரத்தின் உட்பகுதி மூங்கில்போல் வெற்றிடம் கொண்ட தாகவும் நீர் நிறைந்தும் இருக்கும். எவ்வளவு தண்ணீர் தெரியுமா? பெரியதோர் பாவோபாப் மரத்தின் கொள்ளளவு 1,20,000 லிட்டர்கள்! மேலும் கடும் கோடைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட ஆவியாக வெளியேறாதவாறு பாதுகாப் பாக வைக்கப்பட்டிருக்கும். தண்ணீரில் வேறு பயனுள்ள சத்துக்களும் உண்டு. வறட்சிக் காலங் களில் மடகாஸ்கர் - ஆப்பிரிக்க நாட்டு ஏழை மக்கள் இதன் நீரைப் பருகிப் பயன்பெறுவர். மேல்மரம் காய்ந்துவிட்ட நிலையில் பல கிராமங் களில் அடிமரத்தை நீர்த்தேக்கத் தொட்டியாகப் பயன்படு