Posts

Showing posts from November, 2011

'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி

Image
வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்? வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால்இ வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ ந டக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும்இ அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்கு வது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது. 'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான் குட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி. மேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நி

துப்பாகியால் சுட்டால்???

Image
கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும் கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன் ? இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் -- அது துப்பாக்கிக் குண்டோ சாதாரணக் கருங்கல்லோ எதுவாயினும் அவற்றில் -- ஓரளவு விசை இயக்க ஆற்றல் (kinetic energy) உள்ளது; இந்த ஆற்றலை உந்தம்(momentum) என்பர். இவ்வுந்தம் பொருள் செல்லும் நேர்விரைவைப் (velocity) பொறுத்தது. அதாவது நேர்விரைவு மிகுதியாக இருந்தால் உந்தமும் மிகுதியாக இருக்கும். துப்பாக்கிக் குண்டு போன்ற எடை குறைந்த தக்கையான பொருளும் மிக விரைவாகச் செல்லும் போது அதனுடைய உந்தம்இ மெதுவாகச் செல்லும் எடை மிகுந்த பொருளின் உந்தத்தைவிடக் கூடுதலாக இருக்கும். துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறு மைல் விரைவில் செல்வதால்இ அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு விரைவில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும். அவ்வாறு பாய்ந்து செல்லும் குண்டு கண்ணாடிக் கதவால் தடுக்கப்படும்போதுஇ அதன் சிறு அளவு உந்தம் கண்ணாடிக்கு மாற்றப்பெறுவது உண்மையே; அதே நேரத்தில் துப்பாக்கிக் குண்டு சுழன்றவண்ணம் விரைந்து செல்வதால் கண்ணாடிக் கதவில் துளையை உருவாக

திகிலூட்டும் அதிர்ச்சி வளைவுகள்

Image
வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமையை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். அந்த அளவுக்கு உயரமாகவும் மோசமான ஏற்ற இறக்கங்களையும் வளைவுகளையும் கொண்டது இந்தப் தெருவுடன் இணைந்த பாலம். Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த வியத்தகு பாலம் பல்வேறு கார் கம்பனிகளினதும் விளம்பரங்களில் இடம்பிடித்து உள்ளது. ஐந்து மைல் நீளமான குறித்த தெரு 2005 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

உலகில் அதிசய நீர்ப் பாலம்

Image
கட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்ககூடிய வகையில் கட்டங்கள் அமைந்திருந்திரும். அந்த வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம். ஜெர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா? ஜெர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும். இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது. இது கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும். பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும். 1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன் வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ் நீர் பாலத்தில் இரு கப்பல் நாளாந்த சேவையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது . நன்றி இணையம்

உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்

Image
1000 கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்ட நாணயங்களை விட இது பல மடங்கு பெரிதானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் பேர்த் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் தூய தங்கத்தில் இருந்து இந் நாணயம் செய்யப்பட்டது. இதன் பெறுமதி 35மிலியன் பவுண்கள் என மதிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியா மகாராணியின் அவுஸ்திரேலியா விஜயத்தின் ஞாபகார்த்த சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு முகப்பில் மகாராணியின் சிரசு உருவமும், மறுபக்கத்தில் அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகமான கங்காருவின் உருவம் அமையுமாறு பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயத்தை உருவாக்குவதற்கு 18 மாதங்கள் எடுத்தாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி அதிகமாக இருந்த போதிலும் சட்டப்படி இதனை கொள்வனவு செய்தவர் 65,000 பவுண்கள் விலை மதித்துள்ளார். இதனை சட்டப்படி தங்கக் குச்சிகளாக்க முடியாது. இதனை ஒரு சின்னமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . நன்றி இணையம்