Posts

Showing posts from November 9, 2009

உலக தொழிலதிபர்கள் அதில் சிலர்

Image
உலக தொழிலதிபர்கள் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். கிறிஸ் ஆண்டெர்சன் (டேட்.காம் ) கிறிஸ் ஆண்டர்சன் பிரபல வருடாந்திர கூட்டமைப்பான டேட் ( "டெக்னாலஜி, என்டேர்டைன்மேன்ட், டிசைன்) என்பதன் ஆங்கில முதலெழுத்து சுருக்கம் ) TED (Technology, Entertainment, Design )அமைப்பின் நிறுவனர். 1957ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்த இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு தனது சொந்த சேமிப்பிலான வெறும் 10,000 பவுண்டுகளை கொண்டு கணினி ஆர்வலர்களுக்கான ஒரு பொழுதுபோக்கு பத்திரிக்கை நிறுவனத்தை உருவாக்கினார். 'ஃபியூச்சர் பப்ளிஷிங்' என்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்பு கணிப்பொறி தவிர சைக்ளிங் இசை திரைப்படம் விளையாட்டு எண்ணவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் வெளியிடத் தொடங்கியது. இச்சமயத்தில் 1500 பேர் பணிபுரியும் 130க்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிடும் நிறுவனமாக வளர்ந்தது. 1999இல் இந்நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டது. சாம் வோல்ற்றன் சாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன் Samuel Moore Walton மார்ச் 29இ 19