உலக தொழிலதிபர்கள் அதில் சிலர்

உலக தொழிலதிபர்கள் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும்.

கிறிஸ் ஆண்டெர்சன் (டேட்.காம்)



கிறிஸ் ஆண்டர்சன் பிரபல வருடாந்திர கூட்டமைப்பான டேட் ( "டெக்னாலஜி, என்டேர்டைன்மேன்ட், டிசைன்) என்பதன் ஆங்கில முதலெழுத்து சுருக்கம் ) TED (Technology, Entertainment, Design )அமைப்பின் நிறுவனர். 1957ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்த இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு தனது சொந்த சேமிப்பிலான வெறும் 10,000 பவுண்டுகளை கொண்டு கணினி ஆர்வலர்களுக்கான ஒரு பொழுதுபோக்கு பத்திரிக்கை நிறுவனத்தை உருவாக்கினார். 'ஃபியூச்சர் பப்ளிஷிங்' என்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்பு கணிப்பொறி தவிர சைக்ளிங் இசை திரைப்படம் விளையாட்டு எண்ணவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் வெளியிடத் தொடங்கியது. இச்சமயத்தில் 1500 பேர் பணிபுரியும் 130க்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிடும் நிறுவனமாக வளர்ந்தது. 1999இல் இந்நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

சாம் வோல்ற்றன்


சாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன் Samuel Moore Walton மார்ச் 29இ 1918 - ஏப்ரல் 6இ 1992) அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட் மற்றும் சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர். வோல்ற்றன் குடும்பமே உலகின் மிகவும் பணக்காரக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ கனடா அர்ஜென்டினா பிரேசில் தென் கொரியா சீனா ஜெர்மனி இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.

பில் கேட்ஸ்
வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) ) (English: William Henry Gates or Bill Gates (பி. அக்டோபர் 28 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA) பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

மைக்கேல் டெல்



மைக்கேல் டெல் (Michael Saul Dell, பி. பெப்ரவரி 23 1965) டெல் நிறுவனத்தின் (Dell, Inc.) நிறுவனர். டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர். தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் ஐஐ கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார். பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பி.சி'ஸ் லிமிட்டெட் ((PC's Limited) நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார். 1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேசன் (Dell Computer Corporation) என மாற்றினார்.

ராமதுரை
சுப்ரமணியம் ராமதுரை டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் லிமிடெட் (TCS) நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி (CEO) ஆவார்.இவர் 1970களின் பிற்பகுதி முதல் TCS நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரது முயற்சியின் காரணமாக TCS நிறுவனம் உலகிலுள்ள மிகப்பெரிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் 116.000 பேர் பணிபுரியும் நிறுவனமாகவும்இ 53 நாடுகளில் 151 கிளைகளைக் கொண்டதாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் நிகர வருமானம் US$ 5.7 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்