Posts

Showing posts from April 21, 2010

கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் தொகுப்ர்-02

Image
இது முந்தைய பதிவின் தொடர்ச்சியாகும். முந்தைய பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள் இட்சாக் ரபீன் (Yitzhak Rabin,) இட்சாக் ரபீன் பிறப்பு மார்ச்1 1922 – இறப்பு நவம்பர் 4 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும்இ அதன் இராணுவத் தலைவரும் ஆவார். இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும் 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.1994 ஆம் ஆண்டில் சிமோன் பெரெஸ் யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது. சேக் முஜிபுர் ரகுமான் (Shekh Mujibur Rôhman) சேக் முஜிபுர் ரகுமான் (மார்ச் 17 1920 – ஆகஸ்ட் 15 1975) கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975