Posts

Showing posts from March 18, 2011

புது மிருகம் – சிறுத்தையா, புலியா?

Image
சுமத்ரா தீவு காடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள புதுவகை மிருகம் ஒன்று, ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புலி போன்றும், சிறுத்தை போன்றும் காணப்படும் அந்த மிருகத்திற்கு என்ன பெயர் வைப்பது என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மிருகங்களிலேயே மிகவும் ஆக்ரோஷமானதாக கருதப்படு பவை சிறுத்தை மற்றும் புலி. உடல் முழுவதும் புள்ளிகள், கோடுகளுடன் காணப்படும் இந்த வகை மிருகங்கள் ஆசிய காடுகளில் அதிகம் காணப் படுகின்றன. இந்த இரண்டு மிருகங்களின் கலவை போல் காணப்படும் மிருகம் சமீபத்தில் சுமத்ரா, பொர்னியோ காடுகளில் காணப்பட்டன. புலியைப் போன்ற முகத்துடனும், சிறுத்தை போன்ற உடல் அமைப்புடனும் உள்ள இந்த வகை மிருகம் எப்படி உருவானது என ஆராய்ச்சி யாளர்களை குழப்பியுள்ளது. இந்தோ னேசியா நாட்டில் சுமத்ரா காடுகளில் மிருக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி யாளர்களின் கேமராவில் இந்த மிருகத்தின் நடமாட்டம் பதிவானது. ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் உள்ள லிப்னிஸ் காட்டு மிருக ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்ட்ரஸ் வில்டிங் தலைமையிலான குழு, இந்த மிருகம் குறித்த தீவிர ஆராய்ச்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது. “நகரங்கள்

ஜாப்பான் பூகம்பத்தால் புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு

Image
ஜப்பானிய நிலநடுக்கம் காரணமாக உலகில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்பட்ட தேதியிலிருந்து புவிச்சுழற்சியின் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஜப்பானியப் நில அதிர்வைத் தொடர்ந்து புவியின் சுழற்சி வேகம் 1.6 மைக்ரோ செகண்ட்ஸ் அதிகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். நாசா விஞ்ஞானி ரிச்சர்ட் கிரேஸ் இன் ஆய்வின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டு்ள்ளது. அதன் பிரதிபலனாக வெள்ளிக்கிழமையின் நாள் சுருங்கியுள்ளது. அதிலும் பகல் பொழுதின் நேரமே குறைந்துள்ளது. அவ்வாறு ஒரு நாளின் பொழுது சுருங்கிய நிகழ்வானது வெள்ளிக்கிழமையுடன் நின்று விடும் என்றே நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன்பும் கடந்த வருடம் சிலியில் இடம்பெற்ற பூமியதிர்வின் காரணமாக புவிச்சுழற்சியில் இவ்வாறானதொரு மாற்றம் இடம்பெற்றிருந்தது. அதேபோன்று கடந்த 2004 ம் ஆண்டு சுமாத்ராவில் இடம்பெற்ற பூமியதிர்வின் காரணமாக 6.8 மைக்ரோ செகண்டுகள் குறைவான வேகத்தில் புவிச்சுழற்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.