
போர் யுவர் சோயஸ் சிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்! நண்பர்களே!!! எவ்வளவுதான் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று. நம் உடல் நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும். இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான். 1.உட்கார்ந்து யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும். 2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும். 1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க. 2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை பிடித்துக்கொள்ளவும். 3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள் வந்துள்ளன. அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க ஆரம்ப...