எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி இந்தப் பறவைக்கு உள்ளது ! இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ! இது ஏன் சாம்பலாகிறது ? பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி ! இதற்கு சூரியன் தான் லட்சியம் ! சூரியனைத் தொடவேண்டும் என்பதே இந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம் ! பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும் ! சூரியனை நோக்கி உயரும் . ஒரு குறிப்பிட்ட எல்லையில் , சூரியனின் அதீத வெப்பத்தால் உடல் கருகி மண்ணில் விழும் ! மீண்டும் உயிர்க்கும் ! மீண்டும் சூரியனை நோக்கிக் கம்பீரமாய்ப் பறக்கும் ! வெற்றி பெற்ற எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு பீனிக்ஸ் பறவை இருக்கிறது !! அந்த போர்ப் பறவையின் ஆயுள் ரேகையில் தங்க மயிலின் தன்னம்பிக்கையின் ரேகையும் கூடுகட்டிப் பெருமைப்படுத்துகிறது !! பீனிக்ஸ் பறவை பற்றிய இன்னொரு கருத்து பீனிக்ஸ் பறவை சாம்பல் ஆவதற்கும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெறுவதற்கு இன்னுமொரு வியப்பான காரணம் சொல்லப்படுகின்றது. பீனிக்ஸ் பறவை ஒரு இலட்சிய வாதிப் பறவை எனவும் இதற்கு சூரியனைத் தொட வேண்டும் என்பதே வாழ்க்கை இலட்சியம் எனவும்இஅது சூரியன...