ஏரிகள் உருவான வரலாறு
பூமித்தாய் உருவாக்கிய அதிசயங்களில் ஏரிகளும் முக்கியமானவையே. தண்ணீர் பாய்ந்து வந்து நிறைகிற வெற்றிடமோ பள்ளமோ நாளடைவில் ஏரியாகி விடும். தண்ணீர் ஊறி மண் வழியே வெளியேறாத நிலமும் அணைக்கட்டுகளுக்குப் பின்னால் உள்ள இடங்களும்தான் ஏரிக்கு ஏற்றவை. பூமித்தட்டின் நடனமும் பனிக்கட்டி உருகுதலுமே பல ஏரிகள் ஏற்பட காரணம். படிப்படியாக பூமித்தட்டு மேலே எழும்போது அணைகள் போன்ற அமைப்புகளும் கன்னாபின்னா வென இயக்கம் ஏற்படும்போது அகன் ஆழமான ஏரிகளும் உருவாகின்றன. ஆப்ரிக்காவையும் ஆசியாவையும் வெட்டியதுபோல பிரிக்கும் ரிஃப்ட் பள்ளத்தாக்கு பல கன்னாபின்னா ஏரிகள் அமையக் காரணமாக இருந்தது. உதாரணம் சாக்கடல் என்றழைக்கப்படுகிற டெட் ஸீ, நயஸா ஏரி. உருகும் பனிக்கட்டிப்பாறைகள் தரையைத் தேய்த்து, சுத்தம் செய்து பள்ளங்களை உருவாக்குகின்றன. அதோடு அங்கே நிறைய வீழ்படிவுகளையும் கொண்டுவந்து சேர்த்து, ஒரு முகடு அல்லது வரப்பு போன்ற அமைப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் இயற்கை அணைக்கட்டுகள் உருவாகின்றன. வட அமெரிக்காவின் பிரமாண்ட ஏரிகளும், ஐரோப்பாவின் ஆல்பைன் ஏரிகளும் இப்படித் தோன்றியவையே. ஹைதராபாத் நகரத்தை அருமையான சுற்றுலா