தந்தத்தினாலான அரியனை எனக்கே எனக்கு மட்டும்?

உருசியாவை ஆண்ட இவானின் தந்தத்தினாலான அரியனை இது. இப்ப இதை யாரும் கேட்டாலும் கொடுக்க மாட்டாங்கல்லோ. இது எப்படி இருக்கு சும்மா உசுப்புதில்லோ?. இது இன்றைய இலங்கையின் 1000 வோல்டேச் கேள்வி. யாரும் தலைப்பை பற்றி கவலை படாம இங்க பாருங்க. இது யானைகள் பற்றிய தொகுப்பு யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர). பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. யானைகள் உணவும் வாழிடமும் யானைகள் மரம் செடிகொடிகளை உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 14...