தந்தத்தினாலான அரியனை எனக்கே எனக்கு மட்டும்?


உருசியாவை ஆண்ட இவானின் தந்தத்தினாலான அரியனை இது.

இப்ப இதை யாரும் கேட்டாலும் கொடுக்க மாட்டாங்கல்லோ.
இது எப்படி இருக்கு சும்மா உசுப்புதில்லோ?.
இது இன்றைய இலங்கையின் 1000 வோல்டேச் கேள்வி.

யாரும் தலைப்பை பற்றி கவலை படாம இங்க பாருங்க.
இது யானைகள் பற்றிய தொகுப்பு

யானைக்கும் அடி சறுக்கும்.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே


நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர). பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

யானைகள் உணவும் வாழிடமும்


யானைகள் மரம் செடிகொடிகளை உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.

யானைகள் உடலமைப்பு

ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானவை. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும்.


யானைகள் தும்பிக்கை
யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை ஆகும். இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது.

யானைகள் தந்தங்கள்

யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்.
ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன.

யானைகள் காதுகள்

யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

யானையின் மூளை

தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.
யானையின் இனப்பெருக்கம்

யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 - 115 கிலோகிராம் எடை வரை இருக்கும்.


உலக பதிவுலகில் முதன் முறையாக....
படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்