உலகின் முதல் செயற்கை பாக்டீரியா உயிரணு கண்டுபடிப்பு

சனி 22 மே 2010 உலகின் முதல் செயற்கை பாக்டீரியா உயிரணு கண்டுபடிப்பு உயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக செயற்கை உயிரி (செல்) ஒன்றை உருவாக்கி அமெரிக்க அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளன த சயின்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது. 'இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினி தான். ஆகவே செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்.' என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக்தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர். கிரெய்க் வெண்டர். அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர் ஒரு செல்லின் மொத்த மரபணுவையும் வேறு ஒரு புதிய செல்லுக்கு மாற்றி அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் மேரிலாண்டை சேர்ந்த கிரெய்க் என்ற விஞ்ஞானி. அவர் தன் குழுவுடன் நடத்திய ஆய்வு வெற்றி பெற்றிரு...