உலகின் முதல் செயற்கை பாக்டீரியா உயிரணு கண்டுபடிப்பு

சனி 22 மே 2010 உலகின் முதல் செயற்கை பாக்டீரியா உயிரணு கண்டுபடிப்பு

உயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக செயற்கை உயிரி (செல்) ஒன்றை உருவாக்கி அமெரிக்க அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளன


த சயின்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது.


'இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினி தான். ஆகவே செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்.' என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக்தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.

கிரெய்க் வெண்டர்.

அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்

ஒரு செல்லின் மொத்த மரபணுவையும் வேறு ஒரு புதிய செல்லுக்கு மாற்றி அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் மேரிலாண்டை சேர்ந்த கிரெய்க் என்ற விஞ்ஞானி. அவர் தன் குழுவுடன் நடத்திய ஆய்வு வெற்றி பெற்றிருக்கிறது.


செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ. புதிய மரபணுவுடன் தாய் செல் போலவே வளர்ச்சி அடைய துவங்கியது. வேறு விதமாக சொன்னால் ஆட்டின் உயிரணு மாட்டின் உயிரணுவாக மாறியது. அப்படியானால் மரபணுவிலுள்ள குரோமசோம்களையே மாற்றி வேறுவிதமாக செய்யும் சாதனை இது. 'செயற்கையாக உருவாக்கப்பட்ட புதிய செல் மருத்துவ உலகில் பல புதிய பரிணாமங்களை தோற்றுவிக்கும்' என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை அவர்கள் 'சிந்தடிக் செல்' என்று அழைக்கின்றனர்.


பாரம்பரிய நோய்கள் உட்பட பலவற்றுக்கும் இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும். உதாரணத்திற்கு அழுக்கு தண்ணீரை மிகவும் சுத்தமான தண்ணீராக்குவது
குறுகிய காலத்தில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பது போன்றவைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் 'உயிரி ஆயுதமாக இது பயன்படுத்தப்படலாம்' என்ற அச்சமும் பேசப்படுகிறது. ஆகவே மரபுப்படி பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்த கமிஷன் தலைவர் அமி குட்மானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியுள்ளார். இந்த வெற்றியை பாராட்டிய அவர் ' மருத்துவ சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய துறைகளில் இது எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பச்சை நிறப் புளொரொளிர்வைக் காட்டும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உயிரியற் புடகம்.

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

நன்னம்பிக்கை முனை cape of good hope

நம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்