உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் கிரிஸ்டோபர் கொலம்பஸ் கிரிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) (1451-1506) ஒரு கடல் பயணி வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (ஸ்பெயின் நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது . மேலும் . வில்லெம் ஜான்சூன் வில்லெம் ஜான்சூன் (Willem Janszoon 1570 - 1630) டச்சு கடற்பயணியும் குடியேற்ற ஆளுநரும் ஆவார். இவரே ஆஸ்திரேலியாவின் கரையை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். இவர் வில்லெம் ஜான்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அனேகமாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. வாஸ்கோ ட காமா வாஸ்கோ ட காமா (Vasco da Gama 1469 - டிசம்பர் 24 1524) ஒரு போர்த்துகீச நாடுகாண் பயணியாவார். இவரே இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர். இவர் ஆப்பிரிக்காவின் தென்கோடியிலுள்ள நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா வந்தடைந்தார் லொரன்சோ டி அல்மெய்டா லோரென்சோ டி அல்மெய்டா இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த முதலாவது போர்த்துக்...