உலகில் அழிந்து வரும் விலங்குகள் தொகுப்பு-02

எனது முந்தைய பதிவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். மனிதன் தோன்றுவதற்கு முன்னேயே தோன்றிய மிருகங்கள் அழிந்து வருகிறது என்றால் அடுத்து அழியப்போவது மனிதர்கள்தான்... மிருகங்களை அழித்து வருவதன் மூலம் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முற்படுகிறான் என்றுதான் கொள்ள வேண்டும்.. இன்றைய உலகில் மனிதனின் உணவுத்தேவைக்காகவும் வேறு சில தேவைக்காகவும் நாள்தோறும் விலங்குகள் வேட்டை ஆடப்படுகிறது. இதனால் சில விலங்குகள் அழியும் தறுவாய் மிக விரைவில் அவைகளில் சில விலங்குகள் .... பனிக்கரடி polar bear பனிக்கரடி (துருவக் கரடி) நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்தஆர்க்டிக் பகுதியில் காணப்படும் இவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும் வெண்ணிறக்கரடி இனமாகும். இது இறைச்சி உண்ணும் ஊனுண்ணிப்பாலூட்டி. இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்லது. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம்எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் (வசந்த) காலத்தில் கருத்தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக...