Posts

Showing posts from August 10, 2010

சிகாகோ நகரம் உருவாக்கப்பட்டு ஆகஸ்டு 12 டன் 177 வயது

Image
சிக்காகோ நகரம் 1833ம் ஆண்டு ஆகஸ்டு 12 அமைக்கப்பட்டது . அன்றைய தேதி கணக்கெடுப்பின்படி சிகாகோ நகரின் மக்கள்தொகை 350 ஆக இருந்தது . 19ம் நூற்றாண்டின் முடிவில் சிகாகோ மாநகர் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நகரம் என்னும் பெருமையை பெற்றது. இன்று அமெரிக்காவின் பெ ரிய நகரங்களுள் மூன்றாவதாகவும். உலகின் பெரிய நகரங்களுள் சனத்தொகைப்படி 29 வது இடத்திலும் சிகாகோ உள்ளது . சிகாகோ வணிக வாரிய கட்டிடம் சிகாகோ ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர் வணிகம் தொழில் கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரில் இதன் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. மக்கள்தொகையில் நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து சுமார் 3 மில்லியன் மக்கள் தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது. சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம். 108 அடுக்கு மாடிகள் கொண்ட இக்கட்டிடம் 1974ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது . சிகாகோ என்ற பதம் சீக்காக்கா என்ற மயாமி-இலினொய் மொழி பதத்திலிருந்து