சிகாகோ நகரம் உருவாக்கப்பட்டு ஆகஸ்டு 12 டன் 177 வயது

சிக்காகோ நகரம் 1833ம் ஆண்டு ஆகஸ்டு 12 அமைக்கப்பட்டது. அன்றைய தேதி கணக்கெடுப்பின்படி சிகாகோ நகரின் மக்கள்தொகை 350 ஆக இருந்தது.

19ம் நூற்றாண்டின் முடிவில் சிகாகோ மாநகர் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நகரம் என்னும் பெருமையை பெற்றது.

இன்று அமெரிக்காவின் பெரிய நகரங்களுள் மூன்றாவதாகவும். உலகின் பெரிய நகரங்களுள் சனத்தொகைப்படி 29 வது இடத்திலும் சிகாகோ உள்ளது .


சிகாகோ வணிக வாரிய கட்டிடம்





















சிகாகோ ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர் வணிகம் தொழில் கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரில் இதன் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. மக்கள்தொகையில் நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து சுமார் 3 மில்லியன் மக்கள் தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது.


சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம். 108 அடுக்கு மாடிகள் கொண்ட இக்கட்டிடம் 1974ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.


சிகாகோ என்ற பதம் சீக்காக்கா என்ற மயாமி-இலினொய் மொழி பதத்திலிருந்து காட்டு வெங்காயம் எனப் பொருள்படும். முதலில் இப்பகுதியில் குடியேறிய பிரான்சு நாட்டவர் பிரென்சு மொழியில் 'சீக்காக்கா' என்ற சொல்லை திரித்து 'சிகாகோ' கூறியதாக அறியப்படுகிறது சிகாகோ என்ற சொல் முதலில் இந்நகரில் நடுவே பாயும் ஆற்றை குறிக்கவே பயன்பட்டது. பின் அப்பெயரே அந்நகரின் பெயராகவும் ஆக்கப்பட்டது

மில்லியேனியம் பூங்கா
சான் கன்காக் மையம்
இந்நகர் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.
1837 இல் நகராக உயர்த்தபட்டது. அக்காலக்கட்டத்தில் அமெரிக்க உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்திற்கு பெரிதும் உபயோகப்படுத்தப்பட்ட அமெரிக்கப் பேரேரிகளுக்கும் மிசிசிப்பி ஆற்றிக்கும் இடையே அமைந்த போக்குவரத்து மையமாக வளர்ந்தது. இதன்பிறகு மிகக்குறுகிய காலக்கட்டத்திலேயே நாட்டின் மிகச்சிறந்த வணிக மையமாகவும் தொழில் நகராகவும் சுற்றுலாத்தலமாகவும் வளர்ச்சி கண்டது. இன்றைய காலத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 44.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இம்மாநகருக்கு வருகை தருகின்றனர்

சிகாகோ பல்கலைக்கழகம்

1892 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகம் நகரின் தெற்கு பகுதியில் நிறுவப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர்களும் அறிவியலாளர்களும் இந்நாள் வரை 81 நோபல் பரிசுகளை வென்றுள்ளது இப்பல்கலைகழகத்தின் பெருமையை விளக்கும் சான்றாகும்


சிக்காகோ ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கட்டிடங்கள்














1871 ஆம் ஆண்டு நிகழ்ந்த சிகாகோ மாநகர தீயின் விளைவாக நகரின் மூன்றில் ஒரு பகுதி தீக்கிரையானது. கிட்டத்தட்ட அனைத்து வணிகக் கட்டிடங்களும் எரிந்து சாம்பலாகின.

1893 ஆம் ஆண்டு சிகாகோ மாநகரில் கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்த 400வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலக கொலம்பிய கண்காட்சி நிகழ்ந்தது

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்