Posts

Showing posts from April 13, 2010

கண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம்

Image
கண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம் ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் 220 அடியிலிருந்து 240 அடி நீளமான பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; உத்தேசமாக12 சதுர அடி துளை (வெடிப்பு) மோதல் காரணத்தினால் உண்டாகின்றது மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15 1912 இல் முற்றாக மூழ்கியது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. மொத்தம் இருந்த 2228 பேருடன் (1343 பயணிகள் 885 மாலுமிகள்)பேரில் 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1517 பேர் உயிரிழந்தனர். டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பெரிய பகுதிகளாக உடைந்து மூழ்கியது உயிர் தப்பிய பயணிகளால