Posts

Showing posts from August, 2009

நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்

Image
நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள் 'வீட்டுக்கொரு நூலகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை நண்பர் விளக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய வஞ்சகப் பேச்சில் உத்வேகம் பெற்றவர் 'உடனடியாக நூலகம் வைக்கப் போகிறேன். எந்தப் பேங்கில் லோன் வாங்கலாம்?!' என்றார். அவரை ஆற்றுப்படுத்தி அமர வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. குறைந்த பட்சம் நூறு புத்தகங்களாவது வாங்கப் போகிறேன் என்றார். அதில் குறைந்தது ஆறையாவது நீர் படித்தால் செத்ததுக்குப் பிறகு சொர்க்கத்திற்குப் போய்விடலாம் என்று சொல்லி இருக்கிறேன். அதெல்லாம் இருக்கட்டும். ஒருவன் வீட்டில் இருந்தே ஆக வேண்டிய பத்து புத்தகங்களின் பட்டியலை உடனடியாகத் தயார் செய்யுங்கள். ' என்று சொல்லியிருந்தார். அந்த நண்பருக்கு ஊக்கமளித்தமைக்காக மட்டுமல்ல... எங்களையும் இரண்டொரு நாள் பழைய நினைவுகளைப் புரட்டிப் போட வைத்தமைக்கு! மிக மிக யோசனைகள் செய்து இந்தப் பட்டியலை உருவாக்கினேன். நிச்சயமாக ஒரு வாசிப்பாளனாக இது அவரை மாற்றும் என்று சொல்வதற்கில்லை. என்னளவில் இவை என் வாழ்வில் மிக முக்கியப் புத்தகங்களாக நான் கருதுகிறேன். இதில் மாக்ஸிம் கார்க்கியின் புத்தகத்தைக்
Image
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை மிக மிக நல்ல நாள் - இன்று மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு மிகவும் வேண்டியது - பணிவு மிகவும் வேண்டாதது - வெறுப்பு மிகப் பெரிய தேவை - நம்பிக்கை மிகக் கொடிய நோய் - பேராசை மிகவும் சுலபமானது - குற்றம் காணல் கீழ்த்தரமான விடயம் - பொறாமை நம்பக் கூடாதது - வதந்தி ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடியது - உதவி விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம் உயர்வுக்கு வழி - உழைப்பு நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு பிரியக் கூடாதது - நட்பு மறக்கக் கூடாதது - நன்றி இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்
Image
போர் யுவர் சோயஸ் சிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்! நண்பர்களே!!! எவ்வளவுதான் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று. நம் உடல் நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும். இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான். 1.உட்கார்ந்து யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும். 2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும். 1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க. 2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை பிடித்துக்கொள்ளவும். 3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள் வந்துள்ளன. அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க ஆரம்ப

வாழ்க்கை தத்துவங்கள்

முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், முயலாமை வெற்றி பெறாது!' `உன் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு, உன் நண்பனுக்கு சுதந்திரம் கொடுக்காதே!' `நீ கனவில் கண்ட பெண்ணை விட, உன்னை கருவில் கண்ட தாயை நேசி. '`கற்காமல் இருப்பதை விட, பிறக்காமல் இருப்பதே மேல்!'

அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)

அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday) அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday) மின் இயற்றி அதாவது மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மின்சாரம் என்பது வெறும் கனவாகவே இருந்திருக்கும். மின்சாரம் இல்லாத உலக வாழ்க்கையை இன்று கற்பனை செய்தும் பார்க்க இயலாது. மேற்கூறிய மின் இயற்றி மற்றும் மின் இயக்கி (Dynamo) ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்களுள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் அறிஞரான மைக்கேல் ஃபாரடே மிகவும் முக்கியமானவராவார். மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) என்ற கோட்பாட்டை 1831 இல் உலகிற்கு வழங்கியவரும் இவரே. அறிவியல் உலகுக்கு இக்கோட்பாட்டினால் விளைந்த பயன்களும், நன்மைகளும் எண்ணிலடங்கா. மைக்கேல் ஃபாரடே 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் இங்கிலாந்து நாட்டின் நியூயிங்டன் (Newington) என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை கருமார் தொழில் செய்து வந்தார். ஏழ்மையின் காரணமாக மைக்கேல் தனது 13 ஆவது வயதிலேயே செய்தித்தாள் விற்கும் தொழிலையும், புத்தகக் கட்டமைப்புப் (Book binding) பணியையும் மேற்கோள்ளவேண்டிய நிலைமைக்கு ஆளா