Posts

Showing posts from September 13, 2010

உலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி இடம்

Image
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்ட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒர் அணையாகும். இந்த அணை சீனாவின் ஹுபய் மாகாணத்திலுள்ள யில்லிங் மாவட்டத்திலிருக்கும் (Sandouping)சான்டோப்பிங் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் அதிக அளவு (பெரிய) மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும். அணை கட்டமைப்பு 2006ல் கட்டிமுடிக்கப்பட்டது. அக்டோபர் 30 2008 அன்று கரையில் இருந்த 26வது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படதொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியை தவிர மூல திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது. நிலத்துக்கடியில் உள்ள ஆறு மின்னியக்கள் 2011ம் ஆண்டுக்கு முன் முழு செயல் பாட்டுக்கு வராது. அணையின் 32முதன்மை மின்னியக்களையும் 50 மெகாவாட் திறனுடைய இரண்டு சிறிய மின்னியக்கிகளையும் சேர்த்தால் அணையின் மின் உற்பத்தி நிலையத்தின் மொத்த திறன் 22.5 ஜிகாவாட் ஆகும். அணையின் நீளம் 2335 மீட்டர் அணையின் உயரம் 185 metres (607 ft) அணையின் அகலம் (அடியில்) 115 metres (377 ft) மேல்பகுதியி