எவ்வாறு இசையை கேட்கும் போது சந்தோஷமளிக்கிறது?.

அனேகமாக எல்லோருக்குமே இசை பிடிக்கும். இசை கேட்பது, சந்தோஷமளிப்பதற்குக் காரணம் என்ன? அந்த நேரத்தில், மூளையில் ஒரு வேதிப்பொருள் சுரக்கப்படுகிறது. அதுதான் இசை ரசிகரின் மனதுக்குள் மகிழ்ச்சியைப் பரப்புகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். மேற்கண்ட வேதிப்பொருளானது, குறிப்பிட்ட `த்ரில்’லான இசைக் கணத்தை எதிர்பார்க்கிறது, அப்போது ஏற்படும் துடிப்பை உணர்கிறது. இதுதொடர்பான `டோபமைன்’ என்ற வேதிப்பொருளின் பங்கு பற்றி ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளை செல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ள இது உதவுகிறது. புதிய கண்டுபிடிப்பானது, இசை கேட்கும்போது இந்த வேதிப்பொருள் நேரடியாக வெளிப்படுவதைக் காட்டுகிறது. ஒருவர் இசை கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது மூளையை `ஸ்கேன்’ செய்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட மான்ட்ரியால் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ஸட்டோர், வலோரி சலிம்பூர் ஆகியோர், ஏன் எல்லா இன மக்களிடமும் இசை பிரபலமாக இருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கின்றனர். அதாவது குரல் தேவையில்லை, இசைக் கருவிகளில் இருந்து எழும் இசையே `டோபமைனை’ சுரக்கச் செய்துவிட...