Posts

Showing posts from March 28, 2010

வயது 78 சிட்னி துறைமுகப் பாலம்

Image
இரவில் சிட்னி துறைமுகம். இடது பக்கத்தில் ஒப்பேரா மாளிகையும் வர்த்தக மையம் நடுவிலும்இ துறைமுகப் பாலம் வலது பக்கத்திலும் காணப்படுகின்றன சிட்னி துறைமுகத்தின் தோற்றம் பாலத்தின் கட்டுமானத்திற்கு 6000000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டன. ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் உலகிற்கு அறிமுகமான சிட்னியின் முகம். 1788இல் பிரித்தானியாவிலிருந்து வந்த ஆர்தர் ஃபிலிப் என்பவர் சிட்னி நகரத்தை அமைத்தார். மார்ச் 19 1932 - சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. அதிகாரபூர்வ பெயர் - சிட்னி துறைமுகப் பாலம் கடப்பது - ஜாக்சன் துறைமுகம் மொத்த நீளம் - 1149 மீ (3770 அடி). அகலம் - 49 மீ (161 அடி) உயரம் - 139 மீ (456 அடி} சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும் .சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD) வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால்