Posts

Showing posts from 2013

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

Image
சோவியத் ஒன்றியப் படையணியின் முக்கிய துப்பாக்கியாக இருந்த ஏகே 47, பின்னாளில் உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகிறது.   ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் காலமானார் ரஷ்யாவைச் சேர்ந்த கலாஷ்னிக்கோவ் துப்பாக்கியை கண்டுபிடித்தவரான மிகெயில் கலாஷ்னிக்கோவ் தனது 94 ஆவது வயதில் மரணமடைந்துள்ளதாக பி.பி.சி. அறிவித்துள்ளது.  இவர் மிகவும் வறிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பதில் 17 பேர்களில் ஒருவராக ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் 1919 ஆம் ஆண்டு கலாஷ்னிக்கோவ் பிறந்தார். இவர் படைத்த துப்பாக்கி முன்னாள் சோவியத் யூனியனில் மட்டுமல்லாமல், வோர்சோ உடன்படிக்கை நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவற்றில் மிக முக்கியமான ஆயுதமாகத் திகழ்ந்துள்ளது. கலாஷ்னிக்கோவின் வடிவமைப்பை ஒட்டி தயாரிக்கப்பட்ட, பல லட்சக் கணக்கான துப்பாக்கிகள் உலகம் முழுவதும் தயாரித்து விற்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது கிடைத்த சன்மானம்   கலாஷ்னிக்கோவ் இரு முறை சோசலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்றப் பட்டத்த

மனிதன் வரையும் உயிருள்ள மர ஓவியம் பொன்சாய்'

Image
  பொன்சாய்" என்ற பதம் எமக்கு ஜப்பானை நினைவூட்டினாலும் இதன் பிறப்பிடம் சீனா என்றே வரலாறு கூறுகின்றது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் சீனாவில் 'புன்சாய்" என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள் மத்தியில் தோன்றியது. கி.மு 7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சீனாவின் அரச தூதுவர்கள் இந்தக் கலையை ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜப்பானின் சென் பௌத்த துறவிகள் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தியானமுறையாக பொன்சாய்களை வளர்க்கத் தொடங்கினர். நாளடைவில் ஜப்பானியர்கள் பல்வேறு விதமான நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதால் இன்று பொன்சாய் ஒரு கலையாக உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளது. - See more at: http://btoptions.lk/serendib/tamilshow.php?id=656#sthash.B86JkeLb.dpuf  பொன்சாய்' என்ற பதம் எமக்கு ஜப்பானை நினைவூட்டினாலும் இதன் பிறப்பிடம் சீனா என்றே வரலாறு கூறுகின்றது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் சீனாவில் 'புன்சாய்' என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள் மத்தியில் தோன்றியது. கி

காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது? சர்வ தேச காற்று தினம் – ஜுன் 15

Image
    நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும். மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது.இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான்.    மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது. இயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொள்வோமா?    உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள். இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம். ஆறு

பயங்கரமான ஆட்கொல்லி மீன்

Image
உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால்‘பிரானா’என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.   இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.   பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும். இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.   பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த

விரல் நுனியில் எல்லா தகவலும்

Image
  எல்லா தகவல்களையும் என் விரல் நுனியில் வைத்திருக்கிறேன்’ என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். விரல் நுனிக்கும் தகவல்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால், தகவல்களை சேகரிக்க நம் விரல் களும் ஒரு வகையில் உதவத்தான் செய்கின்றன. நாம் இந்த உலகத்தை, சுற்றுச்சூழலை உணர நமக்கு ஐந்து புலன்கள் உண்டு. அவற்றில் ஒன்று தொடுஉணர்வு. இந்த தொடு உணர்வு மூலம் தகவல்களை சேகரிக்க, நம் விரல்கள்தான் நமக்கு பெரிதும் உதவுகின்றன. உதாரணமாக, தகவல்களை துல்லியமாக சேகரிக்கக்கூடிய நவீன கருவி களைப் போன்றவை நம் விரல்கள் என்று சில வல்லுனர்கள் குறிப்பிடுவதைச் சொல்லலாம். ஆனாலும், நம் விரல்களால் தொட்டு உணர்ந்துகொள்ள முடியாத எண்ணற்ற பொருட்களும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. விரல்களின் இந்த இயலாமையை போக்க வந்துவிட்டது `மின்னணு விரல் நுனிகள்’ என்று அட்டகாசப்படுத்துகிறார்கள் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். விரல்களின் நுனியில் (சிறிய உறை போல) அணிந்துகொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின்னணு விரல் நுனி கருவி விரல்களின் தொடு உணர்வுத் திறனை பல மடங்கு அதிகமாக்க

உலகின் டாப் 20 சோம்பேறி நாடுகள் எவை தெரியவேண்டுமா.?

Image
உலகின் டாப் 20 ஒசோம்பேறிஒ நாடுகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சுறுசுறுப்புக்கு பெயர் போன ஜப்பான் 11வது இடத்தில் உள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் தென்னாபிரிக்கா, பூடான், நமீபியா, ஈராக், துருக்கி, சைப்ரஸ், இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் கூட இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி உலகின் மிகப்பெரிய ஒசோம்பேறிஒ நாடாக தென் ஐரோப்பிய நாடான மால்டா உள்ளது. இங்குள்ள 71.9 சதவீதம் பேர் சோம்பேறிகளாக இருக்கிறார்களாம். உலகின் இரண்டாவது பெரிய ஒசோம்பேறிஒ நாடு தென்னாபிரிக்க நாடான ஸ்வாசிலாந்து. இங்குள்ள மக்களில் 69 சதவீதம் பேர் ஒசோம்பேறிஒகள். ஒசோம்பேறிஒ நாடுகளின் பட்டியலில் 3வது இடம் சவூதி அரேபியாவுக்கு கிடைத்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் 68.8 சதவீதம் பேர் சோம்பேறிகள். உலகின் 4வது பெரிய ஒசோம்பேறிஒ நாடு செர்பியா. இங்கு வசிக்கும் மக்களில் 68.3 சதவீதம் பேர் சோம்பேறிகள். உலக ஒசோம்பேறிஒ நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் அர்ஜென்டினா உள்ளது. அர்ஜென்டினா மக்களில் 68.3 சதவீதம் பேர் சோம்பேறிகள். ஆயிரக்கணக்கான தீவுகளை உள்ளடக்கிய நாட