உலகின் டாப் 20 சோம்பேறி நாடுகள் எவை தெரியவேண்டுமா.?

உலகின் டாப் 20 ஒசோம்பேறிஒ நாடுகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சுறுசுறுப்புக்கு பெயர் போன ஜப்பான் 11வது இடத்தில் உள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன் தென்னாபிரிக்கா, பூடான், நமீபியா, ஈராக், துருக்கி, சைப்ரஸ், இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் கூட இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி உலகின் மிகப்பெரிய ஒசோம்பேறிஒ நாடாக தென் ஐரோப்பிய நாடான மால்டா உள்ளது. இங்குள்ள 71.9 சதவீதம் பேர் சோம்பேறிகளாக இருக்கிறார்களாம்.

உலகின் இரண்டாவது பெரிய ஒசோம்பேறிஒ நாடு தென்னாபிரிக்க நாடான ஸ்வாசிலாந்து. இங்குள்ள மக்களில் 69 சதவீதம் பேர் ஒசோம்பேறிஒகள். ஒசோம்பேறிஒ நாடுகளின் பட்டியலில் 3வது இடம் சவூதி அரேபியாவுக்கு கிடைத்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் 68.8 சதவீதம் பேர் சோம்பேறிகள்.

உலகின் 4வது பெரிய ஒசோம்பேறிஒ நாடு செர்பியா. இங்கு வசிக்கும் மக்களில் 68.3 சதவீதம் பேர் சோம்பேறிகள். உலக ஒசோம்பேறிஒ நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் அர்ஜென்டினா உள்ளது. அர்ஜென்டினா மக்களில் 68.3 சதவீதம் பேர் சோம்பேறிகள்.

ஆயிரக்கணக்கான தீவுகளை உள்ளடக்கிய நாடான மைக்ரோனேசியா உலகின் 6வது பெரிய சோம்பேறி நாடு. இங்குள்ளவர்களில் 66.3 சதவீதம் பேர் சோம்பேறிகள். பணக்கார நாடான குவைத் உலகின் 7வது பெரிய ஒசோம்பேறிஒ நாடு. இந்நாட்டு மக்களில் 64.5 சதவீதம் பேர் சோம்பேறிகள்.

இதேவேளை இங்கிலாந்து உலக ஒசோம்பேறிஒ நாடுகள் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து மக்களில் 63.3 சதவீதம் பேர் சோம்பேறிகளாம்.

உலக ஒசோம்பேறிஒ நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. இங்குள்ள மக்களில் 62.5 சதவீதம் பேர் சோம்பேறிகள்.

உலகின் 10வது பெரிய ஒசோம்பேறிஒ நாடு மலேசியா. மலேசிய மக்களில் 61.4 சதவீதம் பேர் சோம்பேறிகள் எனக் கூறப்படுகின்றது
 

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்