மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?

என் மனதை
கொத்திவிட்டு
கூடுகட்டி
குடியும் ஏறிவிட்ட
மரங்கொத்தி
பறவை நீ...
என் மனதை
கொத்தி விடு
போகாதே...

அவுஸ்திரேலியா நியூசிலாந்து மடகாஸ்கர் மற்றும் தென் - வட முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மரங்களிலும் வாழும் பூச்சிகளே இவற்றின் முக்கிய உணவு.

மரங்கொத்தி பறவைகள் வனம் மற்றும் தோட்டங்களில் உள்ள மரங்களில் கூடு அமைத்து வசித்து வருகின்றன. மரங்கொத்திக்கு சிறந்த செவிப்புலன் உண்டு . அது மரத்தில் தொத்திகொண்டவுடன் காதைவைத்துக் கேட்கும் . உள்ளே பூச்சிகள் நடமாட்டம் காதில் விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தை துளைத்து நீண்ட நாக்கால் பூச்சிகள் லபக்!. மரப் பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக மரங்களை கொத்துகின்றன; தவிர மரங்களில் ஓட்டை அமைத்து அதில் தங்களுக்கான குடியிருப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
மரங்கொத்தி தனது அலகு மூலம் மரத்தை கொத்தும் போது அதன் மூளையில் அதிர்வு ஏற்படாமல் இருக்க இயற்கையாகவே அதன் நாக்கு நீளமாக படைக்கப் பட்டுள்ளது. மரங்கொத்தி யின் நீளமான நாக்கு அதன் மூளையைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல இருக்கும். இதனால் அதிர்வில் இருந்து மூளை பாதுகாக்கப்படுகிறது.
மரங்கொத்தி பறவைகளின் கண்கள் எலும்பு திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றுக்கு எவ்வித அதிர்வுகளோ பாதிப்புகளோ ஏற்படுவதில்லை என வன உயிரின ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மரங்களை முட்டி மோதும் போது மூளை கலங்கவோ உள் மண்டை ஓட்டுடன் முட்டி மோதும் வாய்ப்புள்ளது. அளவில் மரங்கொத்தி பறவைகளின் மண்டை ஓட்டுடன் மூளை முட்டி மோதும் வாய்ப்பில்லை; இதன் நாக்கு மண்டை ஓட்டை சுற்றியே வளைந்திருக்கும்.பறவை கண் விழிகளின் மேல் ஒரு ஜவ்வு போன்ற படலம் இமையை மூடித்திறக்கும் வகையில் அமைந்திருப்பதால் மரங்களை கொத்தும் போது தெளிக்கும் மரச்சிராய்மரத்துகள்களில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. அற்புதமான உடலமைப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களை இயற்கை அளித்துள்ளதால் மரங்கொத்தி பறவைகள் எவ்வித வலி வேதனை பாதிப்பு இல்லாமல் மரங்களை கொத்தி தங்கள் உணவுத் தேவையை நிறைவு செய்துக் கொள்கின்றன

Comments

  1. /////அதிர்வுகளோ பாதிப்புகளோ ஏற்படுவதில்லை/////

    ஆமாம் சகோதரா அருமையான தகவல்கள்...

    ReplyDelete
  2. அருமையான அவசியமான பதிவு நண்பா.
    ரேடியோ விட்ஜேட்டை நீக்கினால் வருகையாளர்களை இன்னும் அதிகரிக்கலாம் நண்பா

    ReplyDelete
  3. தகவல்களுக்கு நன்றிங்க. சுவாரசியம் மிக்கவை.

    ReplyDelete
  4. நன்றி Chitra அக்கா

    ReplyDelete
  5. ரேடியோ விட்ஜேட்டை நீக்கினால் வருகையாளர்களை இன்னும் அதிகரிக்கலாம் . நன்றி டிலிப் கருத்துக்கு எவ்வாறு என்று கூற முடியுமா?

    ReplyDelete
  6. ரேடியோ கேட்கவே பலர் வருகிறார்கள் நண்பா..நீக்க வேண்டாம்.
    அம்மாடி எத்தனை திரட்டிகள்!!எப்படி பாஸ்??

    ReplyDelete
  7. மரங்கொத்தி பற்றி புதிய தகவல்கள் பதிந்தமைக்கு நன்றி.

    மைந்தன் சிவா said...
    அம்மாடி எத்தனை திரட்டிகள்!!எப்படி பாஸ்?

    எனக்கு உதில இருக்கிற 4 திரட்டு மட்டும்தான் தெரியும்!!!

    ReplyDelete
  8. ரேடியோ கேட்கவே பலர் வருகிறார்கள் நண்பா..நீக்க வேண்டாம்.
    அம்மாடி எத்தனை திரட்டிகள்!!எப்படி பாஸ்??

    நன்றி மைந்தன் சிவா நண்பா உங்களுக்கு தனி மின்னஞ்சல் முலம் எவ்வாறு திரட்டிகள் இணைக்கலாம் என்பதை இணைத்து அனுப்புகிறேன்

    ReplyDelete
  9. நன்றி கார்த்தி நண்பா

    ReplyDelete
  10. அருமையான தகவல்கள்

    ReplyDelete
  11. மகாதேவன்-V.K நன்றி

    ReplyDelete
  12. வித்தியாசமான தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்