Posts

Showing posts from October 31, 2010

உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை

Image
உலகிலேயே மிகப் பெரிய சிலந்தி வலையை விஞ்ஞானிகள் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடித்துள்ளனர் . மடகாஸ்கரில் உள்ள ஒரு ஆற்றின் மேல் பரந்து விரிந்து காணப்படுகிறது இந்த சிலந்தி வலை. இதுவரை அறியப்படாத ஒரு வகை பொருளால் இந்த வலை பின்னப்பட்டுள்ளது. மிகவும் வலுவாகவும் உறுதியாகவும் காணப்படுகிறது. டார்வினின் ஸ்பார்க் ஸ்பைடர் என்ற புதிய வகை சிலந்தி இந்த உயிரியல் பொருளை வெளிப்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது. ஒரே சிலந்தியால் பின்னப்பட்ட உலகின் மிகப் பெரிய வலை என்ற பெயரையும் இது பெற்றுள்ளது. இந்த வலையில் சிக்கும் சிறிய வகை ஈக்கள் மற்றும் பூச்சிகளை மட்டுமே இந்த சிலந்தி உண்கிறதாம். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தி வலை 82 அடி, (25மீட்டர் ) அகலத்துடன் காணப்படுகிறது . அதாவது நம்மூரைச் சேர்ந்த 2 பஸ்களின் சைஸில் இது உள்ளது. வழக்கமாக பெண் சிலந்திகள்தான் வலை பின்னும் வேலையை செய்யும். அதேசயம் ஆண் சிலந்திகள் வளர்ந்து பெரிய ஆள் ஆகி வயதுக்கு வரும் வரை இந்த வேலையைச் செய்யும். அதன் பிறகு நிறுத்தி விடும். அதன் பின்னர் தனது முழு சக்தியையும்இ பெண் சிலந்தியுடன் இனப்பெருக்க 'வேலை'யில் ஈடுபடுவதற்காக சேமித்து வைக்க