85ஆவது வயதில் விமான கறுப்பு பெட்டி'யின் தந்தை மரணம்

விமான விபத்துக்களின் போது அதற்கான காரணத்தைக் கண்டறிய உதவும் கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்தவரும் பிரபல அவுஸ்திரேலிய விஞ்ஞானியுமான டேவிட் வொரென் தனது 85ஆவது வயதில் 19/07/2010 காலமானார். கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்த டேவிட் வாரன் பற்றிய சிறு குறிப்பு கறுப்பு பெட்டி'யின் தந்தை டேவிட் ரொனால்ட் டி மே வாரன் (David Ronald de Mey Warren) பிறப்பு மார்ச் 20 1925 - இறப்பு ஜூலை 19 2010) என்பவர் விமானத்தின் தகவல் பரிமாற்றத்தினை பதிவு or கறுப்பு பெட்டி செய்யும் விமான தரவு பதிவியைக் கண்டுபிடித்தவரும் ஆஸ்திரேலிய அறிவியலாளரும் ஆவார். வாரன் ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தில் குரூட் ஐனட் என்ற தீவில் ஐரோப்பிய வம்சாவழிப் பெற்றோருக்கு முதலாவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது தந்தை 1934ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். சிட்னிப் பல்கலைக்கழகத்தில் அறிவியல்பட்டதாரியானார். தான் கண்டுபிடித்த கருப்புப் பெட்டியுடன் டேவிட் வாரன் 1952 முதல் 1983 வரை மெல்பேர்ணில் உள்ள பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் வானூர்தி ஆய்வாளராகப் பணியாற்றினார். 1953 இல் கொமெட் என்ற உலகின் முதலாவது பயணிகள்...