அபாயகரமான காளான்கள்

ஒட்டுண்ணிகள், சாறுண்ணிகள் தவிர, அசைவம் உண்ணும் காளான்களும் உள்ளன. இவை பூஞ்சனம் வகையைச் சேர்ந்தவை. இவற்றின் உடல் அமைப்பு இழை களால் ஆனதாக உள்ளது. இந்த வகைக் காளான்களில் ஒன்று, கோதுமைப் பயிரைத் தாக்கும் நூற்புழுவை உண்டு உயிர் வாழ்கிறது. அசைவம் உண்ணும் காளான் களில் சிலவகை, ஒரு குறிப்பிட்ட இனப் பிராணிகளை மட்டும் உண்பதற்கு ஏற்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. வேறு சில காளான்களோ, புழுக்களைப் பிடிப்பதற்கு ஏற்ற தகுந்த பொறிகளைப் போன்ற வசதிகளைப் பெற்றிருக்கின்றன. அசைவம் உண்ணும் காளான்களில் `டிரைக்கோ தீசியம் சிஸ்டோபோரியம்’ என்ற வகைக் காளான் மிகவும் மெல்லிய இழையைப் பெற்றுள்ளது. இரையைப் பிடிக்க எந்த ஒரு தனி அமைப்பும் இதில் அமைந்திருக்கவில்லை. ஆனால் இந்த இழைகளில் இருந்து கசியும் ஒருவிதப் பிசுபிசுப்பான திரவம், இதன் அருகே வரும் புழுக்களைப் பிடித்துக்கொள்கிறது. அப்போது, காளான் வேறு சில மெல்லிய இழைகளைப் புழுவின் உடலினுள் செலுத்தி, அதன் உள்ளே உள்ள அனைத்தையும் உறிஞ்சி ஜீரணித்துக்கொள்கிறது. சில காளான்கள், விதைகள் போன்ற பிசுபிசுப்பான, உயிருள்ள பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. ஏதாவது சிறு பிராணிகள...