Posts

Showing posts from November 14, 2011

'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி

Image
வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்? வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால்இ வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ ந டக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும்இ அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்கு வது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது. 'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான் குட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி. மேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நி

துப்பாகியால் சுட்டால்???

Image
கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும் கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன் ? இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் -- அது துப்பாக்கிக் குண்டோ சாதாரணக் கருங்கல்லோ எதுவாயினும் அவற்றில் -- ஓரளவு விசை இயக்க ஆற்றல் (kinetic energy) உள்ளது; இந்த ஆற்றலை உந்தம்(momentum) என்பர். இவ்வுந்தம் பொருள் செல்லும் நேர்விரைவைப் (velocity) பொறுத்தது. அதாவது நேர்விரைவு மிகுதியாக இருந்தால் உந்தமும் மிகுதியாக இருக்கும். துப்பாக்கிக் குண்டு போன்ற எடை குறைந்த தக்கையான பொருளும் மிக விரைவாகச் செல்லும் போது அதனுடைய உந்தம்இ மெதுவாகச் செல்லும் எடை மிகுந்த பொருளின் உந்தத்தைவிடக் கூடுதலாக இருக்கும். துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறு மைல் விரைவில் செல்வதால்இ அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு விரைவில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும். அவ்வாறு பாய்ந்து செல்லும் குண்டு கண்ணாடிக் கதவால் தடுக்கப்படும்போதுஇ அதன் சிறு அளவு உந்தம் கண்ணாடிக்கு மாற்றப்பெறுவது உண்மையே; அதே நேரத்தில் துப்பாக்கிக் குண்டு சுழன்றவண்ணம் விரைந்து செல்வதால் கண்ணாடிக் கதவில் துளையை உருவாக